என்ன சொல்றீங்க...ஜெயிலர் பொங்கல் ரிலீஸ் கிடையாதா?

சென்னை : ரஜினி நடிக்க உள்ள ஜெயிலர் படம் 2023 ம் ஆண்டு பொங்லுக்கு ரிலீசாகும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பொங்கல் ரிலீஸ் கிடையாது என புதிய தகவல் சமூக வலைதளங்களில் உலவிக் கொண்டிருக்கிறது.

ரஜினிக்கு அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதே போல் டைரக்டர் நெல்சன் திலீப்குமாருக்கும் பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பையோ, வசூலையோ தரவில்லை. இதனால் தலைவர் 169 படத்தை பிரம்மாண்ட வெற்றி படமாக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் ரஜினியை தவிர மற்ற யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

நடிகர்களிடம் பேச்சுவார்த்தை

நடிகர்களிடம் பேச்சுவார்த்தை

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதே போல் முக்கியமான ரோல்களில் நடிக்க ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார் ஆகியோரிடமும் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு சம்பளமாக பெரிய தொகை பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர் கிடையவே கிடையாது

இவர் கிடையவே கிடையாது

இந்த படத்தில் திரைக்கதை அமைக்கும் டீமில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இருப்பதாக தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதுவும் உண்மையில்லை என சமீபத்தில் நடிகர் கிங்ஸ்லி தனது பேட்டியில் கூறி உள்ளார். கே.எஸ்.ரவிக்குமாரின் தலையீடு இந்த படத்தில் கிடையவே கிடையாது என சொல்லி விட்டார்.

அப்போ எதுவுமே உண்மையில்லையா

அப்போ எதுவுமே உண்மையில்லையா

இதே போல் ஜெயிலர் படத்தின் கதை பற்றியும் பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. விக்ரம் படத்தின் கதை என முன்பு சொல்லப்பட்ட தகவல், ஜெயிலர் படத்திற்கானது என்று கூட சொல்லப்படுகிறது. படத்தில் ரஜினி தான் டைட்டில் ரோலான ஜெயிலர் ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் ரஜினிக்காக நெல்சன் சாதாரண கதையை தயார் செய்திருக்க மாட்டார். அதை ரஜினியும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்பதே பெரும்பாலனவர்களின் கருத்தாக உள்ளது.

கன்ஃபார்ம் செய்த கிங்ஸ்லி

கன்ஃபார்ம் செய்த கிங்ஸ்லி

ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றொரு தகவலாக படத்தின் முழு கதையும் இன்னும் ரெடியாகவில்லை. அது ரெடியான பிறகு தான் படத்தின் ஷுட்டிங்கை துவக்குவார்கள் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் கிங்ஸ்லி அளித்த பேட்டியில், ஏதோ சொல்ல நினைத்து, ஃபர்ஸ்ட் ஆஃப் கதையை தற்போது தான் நெல்சன் தயார் செய்து கொண்டிருக்கிறார் என வாய் தவறி உளறி விட்டார்.

ரகசியம் காக்கும் சன் பிக்சர்ஸ்

ரகசியம் காக்கும் சன் பிக்சர்ஸ்

இதனால் ஜெயிலர் படத்தின் ஷுட்டிங்கை எப்போது துவக்குவார்கள், கதை என்ன, படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை உறுதியாகவில்லை. படம் பற்றிய அனைத்தையும் பரம ரகசியமாக வைக்க சன் பிக்சர்ஸ் மற்றும் நெல்சன் டீம் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

என்னது பொங்கல் ரிலீஸ் கிடையாதா

என்னது பொங்கல் ரிலீஸ் கிடையாதா

ஷுட்டிங் எப்போது துவக்குவார்கள் என தெரியாத நிலையில் ஜெயிலர் படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக பல நாட்களாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, ஜெயிலர் படம் பொங்கல் ரிலீஸ் கிடையாதாம். 2023 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 2023 ம் ஆண்டு பொங்கல் ரேசில் ஜெயிலர் Vs தளபதி 66 என்பது பொய்யான தகவல் என்றே சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X