»   »  'அது என்ன முக்கிய அறிவிப்பு? வெறும் கபடிப் போட்டிக்குதான் இவ்ளோ பில்டப்பா?' கமலை ஓட்டும் வலைவாசிகள்!

'அது என்ன முக்கிய அறிவிப்பு? வெறும் கபடிப் போட்டிக்குதான் இவ்ளோ பில்டப்பா?' கமலை ஓட்டும் வலைவாசிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'தொழில்முறை' அரசியல்வாதிகளே சும்மா இருக்க, கமல் ஏன் திடீர் திடீரென பொங்குகிறார்? அதுவும் ட்விட்டரில் மட்டும். செய்தியாளர் சந்திப்புகளில் அவரது அரசியல் விமர்சனங்கள் பற்றிக் கேட்டால், நேரடியாக பதிலே சொல்லாமல் கேட்பவரையும் கோர்த்துவிடுகிறார்.

விளம்பரங்களில் தோன்றாமல் இருந்த கமல் ஹாஸன், இப்போது போத்தீஸ் தொடங்கி கபடிப் போட்டி வரை விளம்பரத் தூதராகிவிட்டார். பிக் பாஸில் அவரது பங்களிப்பு தெரிந்ததே. விளம்பர உலகில் ஒரு நிபந்தனை உண்டு. எப்போதும் பொதுவெளியில் பரபரப்பாக இருக்கும் பிரபலம்தான் அவர்களுக்கு வேண்டும். அதைத்தான் இப்போது கமல் செய்து வருவதாக இணைய வெளியில் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் பரபரப்பாக வேண்டுமானால், கமல் இன்னும் பரபரப்பாக எதையாவது செய்தாக வேண்டும்.

What is that important announcement from Kamal?

நேற்று ட்விட்டரில், 'ஆங்கிலப் பத்திரிகையில் நாளை அறிவிப்பு வரும்' என்று அறிவித்துவிட்டு, ஒரு கொடுந்தமிழ் கவிதையை படமெடுத்து இணைத்திருந்தார். ஓ... கமல் அரசியல் களத்தில் குதிக்கப் போகிறார் போலிருக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பில் பலரும் நாளிதழ்களைப் புரட்டிப் பார்த்தனர். ஆங்கில நாளிதழ்கள் வாங்கும் பழக்கமில்லாத சிலரும்கூட, ஏதாவது வந்திருக்கா என்று கேட்டனர். ஆனால் ஒன்றும் இல்லை.

ஆனால் ஆங்கிலத்தில் ஒரு அறிக்கை மட்டும் வந்தது. அதில் கபடிப் போட்டித் தொடருக்கு கமல் ஹாஸனை தூதராக நியமித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த கபடி மேட்டரைத்தான் கமல் அப்படி குறிப்பிட்டிருந்தாரா? அல்லது இனிமேல் வேறு ஏதாவது அறிக்கை வரவிருக்கிறதா? தெரியவில்லை. அதுகுறித்து இதுவரை கமல் ஹாஸனும் எந்த அப்டேட்டும் செய்யவில்லை.

ஒரு கபடிப் போட்டிக்காக இப்படி இறங்கி விளம்பரம் தேடக் கூடிய அளவுக்குப் போய்விட்டாரா கமல்? இது வலைவாசிகளின் கேள்வி.

English summary
Is Kamal really wants to enter politics or doing some stunts for the sake of his advertisements?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil