Coolie: இன்னும் 10 நாள் இப்படி ஓடுச்சு.. ரூ. 1000 கோடி கன்ஃபார்ம்.. ரஜினியின் ராஜ வசூலுக்கு எது தடை?
சென்னை: தென்னிந்திய சினிமாவில் இருக்கும் நான்கு மொழி திரையுலகங்களில் இரண்டு மொழிகளைச் சேர்ந்த திரையுலகங்கள் பான் இந்தியா ஹிட் கொடுத்துவிட்டார்கள், ரூபாய் ஆயிரம் கோடி வசூலும் கொடுத்துவிட்டார்கள். இதில் ஆயிரம் கோடி வசூல், பான் இந்தியா ஹிட் கொடுக்காத திரை உலகங்கள் என்றால் அது மலையாள திரையுலகமும் தமிழ் திரையுலகமும் தான். மலையாள திரையுலகம் ரூபாய் 1000 கோடி வசூலை எட்டுவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி இல்லை. ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் படங்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் ஆளே இல்லாமல், பல காட்சிகளும் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சூர்யாவின் கங்குவா படத்தைக் கூறலாம். இந்த படம் பான் இந்தியா ஹிட் அடிக்கும் படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் திரைக்கதை சொதப்பல், பின்னணி இசை சொதப்பல், எல்லா கதாபாத்திரங்களும் கத்திக் கொண்டே இருந்தது என பலவும் படத்திற்கு பின்னடைவாக அமைந்தது. இதனால் படம் படுதோல்வி படமாக மாறியது. இதேபோல் வேறு சில காரணங்கள் பொன்னியின் செல்வன் படத்திற்கு.
இப்படி இருக்கும்போது, தமிழ் சினிமாவில் முதல் ஆயிரம் கோடி வசூலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் தான் அடிக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி இருக்கும்போது எல்லோருடைய எதிர்பார்ப்பும் கூலி படத்தின் மீது இருந்தது. காரணம் ரத்தம் தெறிக்க தெறிக்க படங்களை எடுத்து ஹிட் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ், ரஜினி, சன் பிக்சர்ஸ், அனிருத், நாகர்ஜுனா, அமிர் கான், உபேந்திரா, சௌபின் சாஹிர் என பெரிய பட்டாளமே இந்த படத்தில் இருந்தது.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்: படத்திற்கு படக்குழு எதிர்பார்த்ததைவிட ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்யவில்லை என்பதைக் காட்டிலும், படத்தின் கதைக்கு திரைக்கதை நியாயமானதாக இல்லை. அதனால்தானே என்னவோ, மொத்த படமும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. குறிப்பாக பலரும் லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
1000 கோடி டார்கெட்: படத்திற்கு விமர்சனங்கள் இப்படி இருக்கும்போதும், வசூலில் படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூபாய் 151 கோடிகளை உலக அளவில் வசூலித்தது. இது தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இப்படி இருக்கும்போது படம் முதல் மூன்று நாட்களிலேயே ரூபாய் 300 கோடிகளைக் கடந்து வசூல் வேட்டை நடத்தி வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இன்றுடன் அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகிறது. இந்த நான்கு நாட்களில் படம் எப்படியும் ரூபாய் 400 கோடிகள் வரை வசூலித்து விடும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த 10 நாட்கள்: பாலிவுட்டிலும் வார் 2 படத்திற்கு சவால் விடும் அளவுக்கு படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அடுத்த 10 நாட்களில் பாலிவுட், தென்னிந்தியாவில் என தினமும் ரூபாய் 50 கோடிகளை மொத்தமாக வசூலித்தால் ரூபாய் 1000 கோடிகளை அசால்ட்டாக வசூலிக்கும். ஆனால் அடுத்த 10 நாட்கள் கூலி படத்திற்கு சாதகமாக அமையுமா என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











