“ பீஸ்ட்“ மொத்த வசூலே இவ்வளவுதானா ?... அப்போ சாதனைனு சொல்றதெல்லாம் ரீலா ?
சென்னை : பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இன்றோடு 3 நாட்களாகி உள்ள நிலையில் படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படம் வெற்றி அடைந்ததை அடுத்து, பீஸ்ட் திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.

அரபிக்குத்து
பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதுமே பாடல் காபி என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர் இணையவாசிகள். இது வழக்கமாக அனிருத்தின் பாடலுக்கு வரும் விமர்சனம் என்பதால், இதை ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், இளசு முதல் பெரிசு வரை அரபிக் குத்துக்கு ஆட்டம் போட்டு பாடலை ஹிட்டாக்கினர்.

வேறமாதிரி கதை
அதேபோல டிரைலர் வெளியானதும் என்னடா மால் ஹைஜாக் கதையா ? அப்போது இது கூர்கா படத்தின் கதையா என்று கேட்டுவந்தனர். ஆனால், நெல்சன் டிரைலரில் இருப்பது படத்தின் கதையே இல்லை, பீஸ்ட் வேறமாதிரி கதை, மாஸ் ஆக்ஷன், டான்ஸ் என படம் தரமாக இருக்கும் என்று கூறி விஜய் ரசிகர்களை கூலாக்கினார் .

நெகட்டிவ் கருத்து
இதையடுத்து,ஏப்ரல் 13ந் தேதி அதிகாலை 4 மணிக்கு படம் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்றது. பீஸ்ட் திரைப்படம் குறித்து விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்த போதும், பீஸ்ட் படம் முதல் நாள் தமிழகத்தில் ஆல் டைம் ரெக்கார்ட் வைத்ததாக கூறப்பட்டது.

எல்லாம் ரீலா
பீஸ்ட் திரைப்படத்திற்கு ஏரியாவாரியாக எவ்வளவு வசூலாகி உள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. சென்னையில் 2 கோடி, செங்கல்பட்டில் 10 கோடி, நாத் மற்றும் சவுத் ஆற்காடு 5கோடி, கோயம்புத்தூர் 5. 9 கோடி, திருச்சி 3.6 கோடி, மற்ற இடங்களில் 3 கோடி என ஏரியா வாரியாக வசூல் தகவல்கள் வெளியாகி உள்ளது. படம் முதல் நாள் வசூல் 150 கோடிக்கு மேல் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலால் அப்போ சாதனைனு சொல்றதெல்லாம் ரீலா என கேட்டு வருகின்றனர்.
Recommended Video

கே ஜி எப் 2 ஆதிக்கம்
மேலும், இரண்டாவது நாளான நேற்று பல இடங்களில் கே ஜி எப் 2 ஆதிக்கம் அதிகரித்திருந்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களில் பீஸ்ட் மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை எடுத்துவிட்டு கேஜிஎப் 2 படத்தை திரையிட்டு வருகின்றனர். இது விஜய் ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











