»   »  சௌந்தர்யாவை விலங்குகள் நல வாரியம் தூதராக நியமித்திருப்பது ஏன்? பிஆர்ஓ விளக்கம்!

சௌந்தர்யாவை விலங்குகள் நல வாரியம் தூதராக நியமித்திருப்பது ஏன்? பிஆர்ஓ விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சௌந்தர்யா ரஜினியை விலங்குகள் நல வாரியத்தின் தூதராக நியமித்ததிலிருந்து ஏராளமான வாழ்த்துகளும் எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன. இன்று அடுத்த நகர்வாக, சௌந்தர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அவரது உருவப்படத்தை எரித்துள்ளனர்.

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் விலங்குகள் நல வாரியத்தில் சௌந்தர்யாவுக்கு என்ன வேலை என்று கேள்விகள் எழுந்துள்ளன.

What is the role of Soundarya in AWB?

இந்த நிலையில் சௌந்தர்யாவை ஏன் இந்த பொறுப்பில் நியமித்துள்ளனர் என அவரது பிஆர்ஓ ஒரு விளக்கத்தை அனுப்பியுள்ளார்.

அதில், "சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவற்றில் மிக பெரிய அளவில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது நாம் அறிந்த ஒன்றே. இவரை தற்போது விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board) எனும் அமைப்பு தங்களது தூதுவராக நியமித்துள்ளது. இதை பற்றிய தகவல் வெளிவந்தது முதல் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் வேலை என்னவென்றால் திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா அல்லது அது கிராபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வழங்குவதுதான்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறையில் நல்ல நிபுணத்துவம் , கோச்சடையான் என்னும் அனிமேஷன் படத்தை இயக்கிய அனுபவம் உள்ளதால் அவரை விலங்குகள் நல வாரியம் இப்பணியில் அமர்த்தியுள்ளது.

English summary
Soundarya Rajinikanth's PRO has sent an explanation letter to media on the role of her in Animal Welfare Board.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil