»   »  சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு காரணம் தெரிந்தது: அது நாலே நாலு...

சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு காரணம் தெரிந்தது: அது நாலே நாலு...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் தனது படங்கள் வெற்றி பெற 4 விதிமுறைகளை பின்பற்றி வருகிறாராம்.

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அபார வளர்ச்சி அடைந்துள்ளார். விஜய்யை அடுத்து சிறு குழந்தைகளுக்கு சிவகார்த்திகேயனை தான் பிடித்துள்ளது. இதை விஜய்யே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தன் பட வெற்றிக்காக 4 விதிமுறைகளை பின்பற்றுவது தெரிய வந்துள்ளது.

ஒரு படம்

ஒரு படம்

ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பது என்ற விதிமுறையை பின்பற்றுகிறார் சிவா. இதனால் கால்ஷீட் சொதப்பல் இல்லாமல் தெளிவாக ஒரு படத்தில் கவனம் செலுத்த முடியும்.

பணம்

பணம்

சிவகார்த்திகேயன் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. அவர் நல்ல கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார். ரஜினி முருகனுக்காக சிவாவுக்கு இதுவரை சம்பளம் கொடுக்கவில்லையாம்.

தம்மடிப்பது

தம்மடிப்பது

தனது படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது இல்லை என்ற விதிமுறையை பின்பற்றுகிறார் சிவா. ரசிகர்கள் தன்னை பார்த்து கெட்டுப் போகக் கூடாது என்று நினைக்கிறார்.

ரத்தம் சிந்துதல்

ரத்தம் சிந்துதல்

தனது படங்களை குழந்தைகள் அதிக அளவில் பார்ப்பதால் ரத்தக் காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். குழந்தைகளையும் மகிழ்விக்கும் வகையில் நடிக்கிறார்.

English summary
Sivakarthikeyan is following four rules to make his movies a great success.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil