என்னது....ஏகே 61 ல் மோகலாலுடன் இவருமா...வேற லெவல் சம்பவம் காத்திருக்கு போலவே

சென்னை : அஜித்தின் வலிமை படத்தை தொடர்ந்து அதிக எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள விஷயம் அவர் அடுத்தபடியாக நடிக்க போகும் ஏகே 61 படம் தான். இந்த படம் பற்றி வெளியாகி வரும் அடுத்தடுத்த அப்டேட்களே செம மாஸாக இருந்து வருகிறது. ரசிகர்களுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் கொடுத்து வருகிறார்கள்.

டைரக்டர் ஹச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் உருவாகி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்க்கும் படமாக இருப்பது வலிமை படம். இந்த படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீசாக உள்ளது கிட்டதட்ட முடிவாகி விட்டது என்றே சொல்லலாம். ஆனால் போனி கபூர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. பிப்ரவரி 24 வலிமை ரிலீசாகி விடும் என்ற நம்பிக்கை காரணமாக அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 மீது அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது.

எப்போ ஏகே 61 ஷுட்டிங்

எப்போ ஏகே 61 ஷுட்டிங்

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. ஏகே 61 படத்தின் ஷுட்டிங் வரும் மார்ச் 9 ம் தேதி சிறப்பு பூஜையுடன் துவங்க உள்ளதாகவும், முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் தயாராகி வருவதாகவும் ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது. ஐதராபாத், புதுச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். 7 மாதங்களில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என போனி கபூர் கூறி உள்ளதால் தீபாவளிக்கு ஏகே 61 ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது.

ஏகே 61ல் மோகன்லால்

ஏகே 61ல் மோகன்லால்

ஏகே 61 படத்தில் அஜித் பாசிடிவ் - நெகடிவ் என இரு ரோல்களில் நடிக்க போகிறாராம். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மிக முக்கியமான ரோல்களில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து தபுவும், பரமசிவன் படத்திற்கு பிறகு 16 வருடங்கள் கழித்து பிரகாஷ் ராஜும் அஜித் படத்தில் இணைய போகிறார்களாம். இவர்களைத் தொடர்ந்து மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் ஏகே 61 படத்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.

என்னது இவரும் இருக்காரா

என்னது இவரும் இருக்காரா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக உள்ள ஏகே 61 படத்தில் மற்றொரு மெகா ஸ்டாரும் இணைய போகிறாராம். அவர் வேறு யாருமில்லை. தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா தான். ஏகே 61 படத்தில் நடிக்க மோகன்லால், நாகர்ஜுனா இருவரிடமும் பேசப்பட்டுள்ளதாம். ஒப்பந்தமும் கிட்டதட்ட முடிவாகும் நிலையில் உள்ளதாம். அது மட்டுமல்ல இந்த படத்தில் மற்றொரு பான் இந்தியன் நடிகையான அதிதி ராவும் நடிக்க போகிறாராம். அனிருத் தான் இசையமைக்க போகிறாராம்.

வேற லெவல் மிரட்டலா இருக்குமே

வேற லெவல் மிரட்டலா இருக்குமே

இவர்கள் தவிர டோலிவுட் மற்றும் மல்லுவுட்டை சேர்ந்த மேலும் சில டாப் நடிகர்களிடமும் பேசப்பட்டு வருகிறதாம். ஏகே 61 படத்தில் இணைபவர்கள் பற்றிய தகவலை கேட்டு ஒட்டுமொத்த சினிமா உலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளதாம். அஜித் - மோகன்லால் காம்போவை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதில் அஜித் - மோகன்லால் - நாகர்ஜுனா காம்போ என்றால் அதிரடி, மிரட்டலுக்கு கேட்கவா வேண்டும். படம் வேற லெவலில் இருக்க போகிறது என்பது மட்டும் உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X