விஜய்யின் வாரிசு இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?...பகீர் கிளப்பிய ப்ளூசட்டை மாறன்

சென்னை : எந்த நடிகரின் படம் வந்தாலும் அந்த படத்தை விமர்சித்து ட்விட்டரில் போஸ்ட் போடுவது ப்ளூசட்டை மாறனின் வழக்கம். கண்டனம், எதிர்ப்பு வந்தாலும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

ஆரம்பத்தில் நடிகர்களின் படங்களை விமர்சித்து வந்த ப்ளூசட்டை மாறன், தற்போது நடிகர்களின், குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் பற்றிய அறிவிப்பையும் விமர்சித்து ட்வீட் போட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

அப்படி லேட்டஸ்டாக, விஜய்யின் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து அது ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி என சொல்லி பரபரப்பை கிளப்பி உள்ளார். இது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தளபதி 66 டைட்டில் வாரிசு

தளபதி 66 டைட்டில் வாரிசு

விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து கதை என்னவாக இருக்கும் என பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

லைக்குகளை அள்ளும் போஸ்டர்

லைக்குகளை அள்ளும் போஸ்டர்

இந்த சமயத்தில் வாரிசு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறது. விஜய்யின் முந்தைய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் சாதனையை வாரிசு முறியடிக்குமா என்பது தான் தற்போது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

என்னது இந்த படத்தின் காப்பியா

என்னது இந்த படத்தின் காப்பியா

இந்நிலையில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பகிர்ந்த ப்ளூசட்டை மாறன், 2008 ம் ஆண்டு ஹாலிடுவுட்டில் வெளியான Larco Winch படத்தின் போஸ்டருடன் ட்வீட் போட்டுள்ளார். ப்ளூசட்டை மாறனின் ட்வீட்டை கலாய்ப்பதுடன், வாரிசு ஃபர்ஸ்ட் லுக்கையும் பலர் கலாய்த்து வருகின்றனர்.

பகீர் கிளப்பிய ப்ளூசட்டை மாறன்

பகீர் கிளப்பிய ப்ளூசட்டை மாறன்

ப்ளூசட்டை மாறன் தனது ட்வீட்டில், ஒரு பெரிய கோடீஸ்வரர் கொலை செய்யப்பட்ட பிறகு, அவரன் ரகசிய வளர்ப்பு மகன், தான் வாரிசு என்பதை சட்டப்பூர்வ நிரூபிப்பதுடன், தனது தந்தையில் நிதி சாம்ராஜ்யத்தை கைப்பற்ற நடக்கும் சதி வேலைகளையும் தடுத்து நிறுத்துகிறான் என்பது தான் Larco Winch படத்தின் கதை. வாரிசு இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கா அல்லது தழுவலா அல்லது காப்பியா? என பதிவிட்டுள்ளார்.

கட் காப்பி பேஸ்ட்ப்பா

கட் காப்பி பேஸ்ட்ப்பா

The Heir Appartment : Larco Winch படத்தின் கதையும் விஜய்யின் வாரிசு படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒத்துப் போவதாக பலரும் கூறி வருகின்றனர். வாரிசு ஃபர்ஸ்ட்லுக், கபாலி ஃபர்ஸ்ட்லுக்கின் காப்பி என்று சிலர் கூறி வருகின்றனர். இந்த ஃபர்ஸ்ட்லுக் கூகுளில் இருந்து கட் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது என சிலர் கூறி வருகின்றனர்.

பைரவா 2 எடுத்திருக்காங்களா

பைரவா 2 எடுத்திருக்காங்களா

ஃபர்ஸ்ட்லுக், டைட்டில் தான் வெளியிட்டுள்ளார்கள். இதை வைத்து மொத்த கதையை சொல்லி, இப்படி அலசி ஆராய்ந்து வருகிறார்கள். இது பைரவா 2 படமா என்று கூட சிலர் கேட்டு வருகின்றனர். இதே மாதிரி ஒரு கதையில் பவன் கல்யாண் ஏற்கனவே நடித்து விட்டார் என்று கூட சொல்லி வருகின்றனர்.

திட்டி தீர்க்கும் விஜய் ஃபேன்ஸ்

திட்டி தீர்க்கும் விஜய் ஃபேன்ஸ்

அதே சமயம் ப்ளூ சட்டை மாறனை விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். ஃபர்ஸ்ட்லுக் வச்சு கதை சொல்லும் அறிவாளி. நீ எடுத்துவச்சியே ஒரு கண்டறாவி படம். அது ஓடுமான்னு கவனிச்சியா. அவன் அவன் கோடிக் கணக்கில் பணம் போட்டு படம் எடுத்து வச்சிருக்க. நீ வந்து ஃபர்ஸ்ட்லுக்கிலேயே அத்தனையும் காலி பண்ணுவியா என கேட்டு திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X