»   »  ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்

ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ப.பாண்டி அழகான படம். ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்... பின்னிட்டாரு என இயக்குனர் ராஜுமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடை தெரிய வேட்டிக்கட்டி சுத்தி வந்த ராஜ்கிரணை ப. பாண்டிக்காக ஜீன்ஸ் பேண்ட், லெதர் ஜாக்கெட் போட்டு புல்லட் ஓட்ட வைத்துவிட்டார் இயக்குனர் தனுஷ். ராஜ்கிரண் ஸ்டைலாக மாறியிருப்பதும் நன்றாக உள்ளது.

படத்தை பார்த்தவர்கள் இயக்குனர் தனுஷ் அசத்திவிட்டார் என்று பாராட்டுகிறார்கள்.

ராஜுமுருகன்

ப.பாண்டி அழகான படம். ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்... பின்னிட்டாரு. முதியவர்களின் தனிமையை, அன்பை,காதலை இசையும் எமொஷனுமாய் பேசுகிற இடங்கள் அற்புதம்... கடைசி நிமிடங்களில் கண்களில் ஈரம். வாழ்த்துக்கள் இயக்குனர் தனுஷ்! என இயக்குனர் ராஜுமுருகன் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

அசோக் செல்வன்

#PaPaandi ரசித்து பார்த்தேன்! ராஜ்கிரண் சார் மற்றும் ஷான் ரோல்டன் செம்ம! தனுஷ் நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன் என நடிகர் அசோக் செல்வன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சதீஷ்

ப. பாண்டி படம் பார்த்தேன் அருமை. ராஜ்கிரண் சார், பிரசன்னா, ஷான், வேல்ராஜ் சார், ரேவதி மேடம் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என நகைச்சுவை நடிகர் சதீஷ் பாராட்டியுள்ளார்.

சமுத்திரக்கனி

பவர் பாண்டி படத்தில் சிறப்பான காட்சிகள். தனுஷ் சார் மிகவும் திறமையானவர். எதிர்கால படங்களிலும் அவரை இயக்குனராக பார்க்க காத்திருக்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் சமுத்திரக்கனி.

English summary
Kollywood celebrities took to social media to appreciate director Dhanush and Rajikiran for their latest movei Pa. Paandi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil