மாறும் ஓட்டு விகிதம்...அப்போ பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு இல்லையா?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதி வாரம் நடைபெற்று வருகிறது. 100 நாட்களை கடந்து ஃபினாலே வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை ஃபினாலே என்றைக்கு நடக்க போகிறது என்ற அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அமீர், நிரூப், பாவனி, பிரியங்கா, ராஜு ஆகியோர் ஃபைனலுக்கு சென்றுள்ளனர். இவர்களில் ராஜு தான் டைட்டில் வெல்ல போகிறார். ரன்னர் அப் பிரியங்கா வாங்குவார் என கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் போட்டியாளர்களுக்காக சோஷியல் மீடியாக்களில் ஓட்டுக் கேட்டு வருகின்றனர்.

கூலாக இருந்த ராஜு, பிரியங்கா

கூலாக இருந்த ராஜு, பிரியங்கா

ராஜு தான் பிக்பாஸ் சீசன் 5 ன் டைட்டில் வின்னர். இது முன்பே முடிவு செய்யப்பட்டது. அதனால் தான் ராஜு மற்றும் பிரியங்கா கடைசி வரை எதற்கும் டென்ஷன் ஆகாமல் இருந்தார்கள். இவர் தான் டைட்டில் வெல்ல தகுதியானவர், அவர் தான் தகுதியானவர் என பலரும் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

டிரெண்டிங்கில் ராஜு

டிரெண்டிங்கில் ராஜு

ராஜு தான் டைட்டில் வின்னர் என்பது ஏறக்குறைய முடிவாகி விட்டதால் #RajuWinHearts என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். இதில் ராஜு செய்த காமெடியான விஷயங்கள், மிமிக்ரி போன்ற வீடியோ க்ளிப்பிங், பழைய வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து ரசிகர்கள், அதிக லைக்குகளை பெற்று வருகிறார்கள்.

என்னது...எல்லாமே மாறுதா

என்னது...எல்லாமே மாறுதா

ஆனால் லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவலின் படி டைட்டிலை ராஜு வெல்ல போகிறாராம். அதே சமயம் இரண்டாவது இடம் பெறுவார் என கூறப்பட்ட பிரியங்காவிற்கு ஓட்டுக்கள் குறைந்து வருகிறதாம். அவருக்கு பதில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாவனிக்கு தான் அதிக ஓட்டுக்கள் குவிந்து வருகிறதாம். அதனால் ரன்னர் அப்பை பாவனி தான் பெறுவார் என கூறப்படுகிறது.

இவருக்கு தான் மக்கள் ஆதரவா

இவருக்கு தான் மக்கள் ஆதரவா

பாவனிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதால் போற போக்கில் முதல் இடத்திற்கு வந்து டைட்டிலை வெல்ல கூடிய வாய்ப்பும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. ஓட்டு விகிதம் மாறி வருவதால் டைட்டிலை வெல்ல போகிறவர் யார் என கணிக்க முடியாமல் உள்ளதாம்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 12th January 2022 - Promo 3 | Director Raju, Hero Ciby ஒரு கதை சொல்லட்டுமா Sir
யாருக்கு எவ்வளவு ஓட்டு

யாருக்கு எவ்வளவு ஓட்டு

ராஜுவிற்கு இதுவரை 41 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஓட்டளித்துள்ளனராம். தொடர்ந்து ராஜு தான் முதலிடத்தில் இருந்து வருகிறார். அதே சமயம் இரண்டாவது இடத்தில் 19 மற்றும் 16 சதவீதம் ஓட்டுக்களுடன் பாவனி மற்றும் பிரியங்காவிற்கு கடும் போட்டி நடந்து வருகிறதாம். ரசிகர்களின் மனங்கள் மாறி வருவதால் தான் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் ஃபைனல் தேதியை அறிவிக்காமல் அமைதி காக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X