»   »  'மெர்சல்' படத்தில் இன்னும் என்னென்ன ஸ்பெஷல்?

'மெர்சல்' படத்தில் இன்னும் என்னென்ன ஸ்பெஷல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவில் அடுத்த பெரும் எதிர்ப்பார்ப்பு 'மெர்சல்' படத்தின் மீது தான். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு எனப் பலர் நடித்துள்ள இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்தைப் பற்றி தினமும் ஏதாவது புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் என ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மெர்சல் படம் பற்றிய சில லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஒளிப்பதிவு :

ஒளிப்பதிவு :

அட்லீயின் நண்பர் ஜார்ஜ். ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருந்த இவர் வேறு படங்கள் இருந்ததால் இப்படத்தில் கமிட்டாகவில்லையாம். அவருக்கு பதிலாக விஷ்ணு என்பவர் அதை கவனித்து வருகிறார். இவர் தனது படிப்பு முடிந்ததும் உதவி இயக்குனராக அட்லீயை தேடி வந்தவராம். அவருக்கு வாய்ப்பு வழங்கி உதவியிருக்கிறார் அட்லீ.

சண்டைக்காட்சி :

சண்டைக்காட்சி :

'மெர்சல்' படத்தில் வரப்போகும் மிரட்டல் பாடலை ராஜஸ்தானில் கடும் வெயில் எனக்கூட பாராமல் 3000 துணை நடிகர்களோடு படமாக்கியிருக்கிறார்களாம். விஜய் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் முக்கியமானதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

மூணு பேருக்கும் மூணு விதமா :

மூணு பேருக்கும் மூணு விதமா :

மெர்சலில் 15 இடங்களில் செம பவர்ஃபுல்லான காட்சிகளை வைத்திருக்கிறார்களம். விஜய்க்கு இந்தப் படங்களில் மூன்று கெட்டப்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கு தனித்தனி குணாதிசயங்கள் இருக்குமாம். அதற்கேற்ப காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளனவாம்.

இன்னொரு சர்ப்ரைஸ் :

இன்னொரு சர்ப்ரைஸ் :

இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்த வாரத்தில் படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. அதோடு படத்தின் தீம் பாடலையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இப்படத்தின் டீஸரும், பாடலும் ரசிகர்களுக்கு செம டிரீட்டாக இருக்கும்.

English summary
'Mersal' have more much surprises in the line. 'Mersal' team has decided to release theme song with movie teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil