twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரட்டை மனநிலையில் சுற்றும் விக்ரமன்..என்ன ஆச்சு?..அரசியல்வாதியால் பிக்பாஸில் சோபிக்க முடியாதா?

    |

    சென்னை: விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் இருக்கிறார்.

    அரசியல்வாதியாக இருப்பதா? அனைவரிடமும் சகஜமாக பழகுவதா? என்கிற இரட்டை மன நிலையில் இருக்கிறார்.

    ஜாலியாக இருந்தால் வெளியே தனது இமேஜ் நாளை கிண்டலடிக்கப்படுமா? என்கிற குழப்பத்தில் சுற்றுகிறார்.

    விக்ரமன் ஷோவில் இல்லாமலே இருந்திருக்கலாம்..முகத்திற்கு நேர் சொன்ன அமுதவாணன்..2வது ப்ரோமோ இதோ!விக்ரமன் ஷோவில் இல்லாமலே இருந்திருக்கலாம்..முகத்திற்கு நேர் சொன்ன அமுதவாணன்..2வது ப்ரோமோ இதோ!

     தாக்குப்பிடிக்க முடிந்தால் மட்டுமே கோப்பை அதுதான் பிக்பாஸ் வீடு

    தாக்குப்பிடிக்க முடிந்தால் மட்டுமே கோப்பை அதுதான் பிக்பாஸ் வீடு

    பிக் பாஸ் வீட்டுக்கு வருபவர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் வருவதை பார்க்கலாம். ஒவ்வொருவரும் தான் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் தான் வருவார்கள். ஆனால் பிக் பாஸ் வீடு அவர்களுக்கு வேறுவித அனுபவத்தை கொடுக்கும். அதில் தாக்கு பிடித்து இதுவரை வந்தவர்கள் வெகு சிலராக மட்டுமே இருப்பார்கள். அதிலும் குறிப்பாக அனைவருடனும் ஒத்துழைத்து செல்பவர்கள், துன்பங்களை தாங்குபவர்கள், திறந்த மனதுடன் இருப்பவர்கள் பெரும்பாலும் வென்று இருக்கிறார்கள்.

     பிக்பாஸ் வீடு ஒரு உளவியல் சார்ந்த ஆய்வுக்கூடம்

    பிக்பாஸ் வீடு ஒரு உளவியல் சார்ந்த ஆய்வுக்கூடம்

    பிக்பாஸ் வீட்டிற்கு பலதரப்பட்ட நிலையில் இருந்து வருகிறார்கள். மேல் தட்டு வர்க்கத்திலிருந்து வருபவர்கள் சிறந்த போட்டியாளராக இருப்பார்கள், சாதாரண நிலையில் இருந்து வருபவர்கள் எதுவும் தெரியாதவர்களாக இருப்பார்கள் என்பதையெல்லாம் பிக் பாஸ் வீடு உடைத்து விட்டதை நாம் பல சீசன்களில் பார்த்துள்ளோம். அதனால் தான் பிக் பாஸ் வீடு ஒரு உளவியல் சார்ந்த ஆய்வுக்கூடம் என்கிறோம். இதில் உயர்ந்த இடத்தில் இருந்து வரும் பிரியங்கா போன்றவர்கள் எதையும் சந்திக்க முடியாமல் கதறி அழுதததையும், சாதாரண நாடாக கலைஞரான தாமரை போன்றவர்கள் தாக்குப்பிடித்து படிப்படியாக பேசி மக்கள் மனதை கவர்வதையும் பார்த்தோம்.

     கேமராவை மறக்காமல் நடிப்பவர்கள் ஒருவாரம் தாண்டியும் இருக்கின்றனர்

    கேமராவை மறக்காமல் நடிப்பவர்கள் ஒருவாரம் தாண்டியும் இருக்கின்றனர்

    இந்த சீசனிலும் அதேபோல் பலவித போட்டியாளர்கள் வந்துள்ளனர். இந்த சீசனில் சினிமா, சின்னத்திரையைச் சேர்ந்தவர்களை தாண்டி அரசியல்வாதி விக்ரமன் டிக்-டாக் புகழ் ஜிபி.முத்து, தனலட்சுமி, திருநங்கை ஷிவின்கணேசன் போன்றவர்களும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் வழக்கம் போல் வெள்ளந்தியாக வெளிப்படையாக பேசுபவர்களே பிக்பாஸில் மக்கள் மனம் கவர்வார்கள் என்பதற்கு ஏற்ப ஜி.பி.முத்து தொடர்ந்து ஸ்கோர் செய்து வருகிறார். சாந்தி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் சாதாரணமாக பழகி வருகிறார்கள். சிலர் இன்னும் கேமரா இருப்பதை மறக்காமல் நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் நிலை வரும் வாரங்களில் மாறும்.

     மறைமுகமான நெபோடிசம் இந்த முறையும் பிக்பாஸ் வீட்டில் உள்ளது

    மறைமுகமான நெபோடிசம் இந்த முறையும் பிக்பாஸ் வீட்டில் உள்ளது

    வழக்கம் போல் பிக்பாஸ் வீட்டில் வெளிப்படையாக இருப்பவர்கள் அல்லது ஒருவர் கருத்தை அனைவரும் ஆதரித்து ஒரு நபரை ஓரங்கட்டுவது என்பது இந்த சீசனிலும் தொடங்கி உள்ளதை பார்க்கிறோம். ஷிவினுக்கு எதிராக அதிகப்படியான வாக்குகள் விழுவதை பார்க்கிறோம். அதே நேரம் பிக் பாஸ் வீட்டில் முதன்முறையாக அரசியல் கட்சியிலிருந்து வந்துள்ள விக்கிரமன் இரண்டு விதமான மன நிலையில் திணரிக் கொண்டிருக்கிறார். தான் ஜாலியாக பழகினால் வெளியே நாளைக்கு விமர்சிக்கப்படுவோமோ என்கிற மனநிலையிலும், அல்லது அரசியல்வாதி போல் இருந்து விடலாமா? என்கிற மனநிலையிலும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

     பிக்பாஸ் வீடு பற்றி 5 சீசனைப்பார்த்து தெரிந்த விக்ரமன் தீர்மானித்திருக்கணும்

    பிக்பாஸ் வீடு பற்றி 5 சீசனைப்பார்த்து தெரிந்த விக்ரமன் தீர்மானித்திருக்கணும்

    விக்ரமன் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னர் அவர் இதை யோசித்து இருக்க வேண்டும். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தால் சாதாரணமாக எளிமையான முறையில் அனைவரிடமும் பழகுவது அவசியம். பிக்பாஸ் வீட்டுக்கு வருபவர்கள் திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் அதிகம் இருப்பார்கள். து ஆட்டம்-பாட்டம், கேலி-கிண்டல், ஆடல்-பாடல் அதிகம் இருக்கும். அதில் இயல்பாக ஒன்றிப்போக வேண்டும் என்பதை பல சீசன்களில் பார்த்துள்ள விக்ரமன் யோசித்துத்தான் உள்ளே வந்திருக்கவேண்டும். உள்ளே வந்தபின் நான் எப்பேற்பட்ட அரசியல்வாதி இவர்களுடன் நான் எப்படி ஒன்றிப்பழக முடியும், எப்படி ஆடிப் பாட முடியும் என்கிற மனநிலையில் தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள சில இடங்களில் விவாதம் செய்து மேலும் சிக்கலை பெரிதாக்கிக் கொள்கிறார் விக்கிரமன்.

     இந்த வாரத்தில் விக்ரம் வெளியேற்றப்படலாம்

    இந்த வாரத்தில் விக்ரம் வெளியேற்றப்படலாம்

    இவருக்கு என்ன ஆச்சு என்று வெளியில் உள்ளவர்கள் கேட்கின்றனர். விக்ரமனுக்கு ஒன்றும் ஆகவில்லை அவருடைய மனநிலை தான் பிரச்சனை. தான் விக்ரமனாக இருக்க வேண்டுமா? அல்லது பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக மாற வேண்டுமா? என்கிற இரண்டு விதமான நிலையில் சிக்கி அல்லாடுக்கிறார். ஒன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது இயல்பான போட்டியாளராக மாற வேண்டும். இரண்டாவது நடக்கவே நடக்காது என்பது விக்கிரமனின் நடத்தையில் தெரிகிறது. ஆகவே அவர் பிக்பாஸை வீட்டை விட்டு வெளியேறுவது தான் அவருக்கு சிறந்த வழி. அது இந்தவாரத்தில் கூட அடக்கலாம்.

    English summary
    Vikraman is helpless in the Bigg Boss house. To be a politician? Getting along with everyone? He is in a double-minded state. If he is in a funny mind, outside of his image will be teased tomorrow? He wanders around in confusion.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X