பத்து தல ஷுட்டிங் எப்போ... தாமதத்திற்கு காரணம் சிம்புவா...ஏன் என்னாச்சு?
சென்னை : பத்து தல படத்தின் ஷுட்டிங் துவங்க கால தாமதமாவதற்கு காரணம் சிம்பு தான் என கூறப்படுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உள்ளதாம். இதனால் சிம்புவிற்காக தான் மொத்த டீமும் வெயிட்டிங் என கூறுகிறார்கள்.
மாநாடு படம் தந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் ரொம்ப பிஸியாக நடித்து வந்தார் சிம்பு. ஒரு வழியாக சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட்டு விட்டது.

பத்து தல ஷுட்டிங் எப்போ
இதனால் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிம்புவின் அடுத்த படமான பத்து தல படத்தின் ஷுட்டிங்கை எப்போது துவக்குவார்கள் என அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள். டைரக்டர் கிருஷ்ணா இயக்கி வரும் பத்து தல படத்தில், கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இதெல்லாம் முடிச்சுட்டாங்களா
பத்து தல படம் கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார் நடித்த பிளாக்பஸ்டர் படமான மப்டி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படத்தில் ஏற்கனவே கெளதம் கார்த்திக் நடிக்கும் சீன்களை எடுத்து முடித்து விட்டார்களாம். சிம்புவின் சீன்கள் மட்டும் தான் மீதம் உள்ளதாம். வெந்து தணிந்தது காடு படத்தை முடித்த உடன் பத்து தல ஷுட்டிங்கை சிம்பு துவக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சிம்புவிற்காக தான் வெயிட்டிங்
ஆனால் தற்போது மே 25 ம் தேதி தான் பத்து தல ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். சிம்புவிற்காக தான் இந்த ஒரு மாத இடைவெளியாம். இதற்கு என்ன காரணம் என்றால், வெந்து தணிந்தது காடு படத்திற்காக அநியாயத்திற்கு வெயிட்டை குறைத்து விட்டாராம் சிம்பு. ஆனால் பத்து தல படத்தில் தாதா கேரக்டர் என்பதால் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமாம். அதோடு தாடியும் பெரிதாக வளர வேண்டுமாம். பிக்பாஸ் அல்டிமேட் மேடையிலேயே சிம்பு சொன்னதை போல் தாடி வளர்ப்பதற்காகவும், வெயிட்டை ஏற்றுவதற்காகவும் தான் இந்த ஒரு மாத இடைவெளியாம்.

விரைவில் ரிலீசை எதிர்பார்க்கலாம்
மே மாதம், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பத்து தல படத்தில் சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். மொத்தம் 20 நாட்கள் அங்கு ஷுட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். தனக்காக காத்திருக்காமல் மற்றவர்களின் சீன்களை எடுத்து முடிக்கும் படி சிம்பு தான் சொன்னாராம். அதனால் தான் சிம்புவை தவிர மற்றவர்கள் நடிக்கும் காட்சிகளை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டார்களாம். தற்போது சிம்பு நடிக்கும் சீன்களை எடுத்து முடித்த உடன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை ஆரம்பிக்க போகிறார்களாம்.

என்ன மனுஷன்யா இவரு
பத்து தல படம் முடிந்ததும், மீண்டும் உடல் எடையை நார்மல் ஆக்கி, கோகுல் இயக்கும் கொரோனா குமாரு படத்தில் நடிக்க போகிறாராம் சிம்பு. படத்திற்கு படம் உடல் எடையை கூட்டி, குறைத்து நடித்து வருவதால் போகிற போக்கை பார்த்தால் சிம்பு, கமல் மற்றும் விக்ரமையே மிஞ்சி விடுவார் போல என கோலிவுட் வட்டாரங்களில் பலரும் பேசிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











