Don't Miss!
- News
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் குரூப்பில் கமெண்ட்.. கொல்லப்பட்ட நபர்.. என்.ஐ.ஏ விசாரணை
- Sports
இதுமட்டும் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??.. உலக சாதனைக்கே வரவிருந்த விணை.. பும்ராவின் அதிர்ஷ்டம்!!
- Finance
'இந்த' துறையில் ரூ.30 கோடி-யா.. அசத்தும் ஈரோடு ஆர்த்தி..!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Automobiles
உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா? இனி கவனமா இருக்கணும்!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
'இப்ப என்ன செய்யணும்? ப்ளீஸ் உதவி செய்யுங்க?' - டிவிட்டர் மீது பி.சி.ஸ்ரீராம் அதிருப்தி
சென்னை: ஒளிப்பதிவு ஜாம்பவான் பி.சி.ஸ்ரீராமின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூடிக் திடீரென நீக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ட்விட்டர் மீது கடந்த சில நாட்களாக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றார் பி.சி.ஸ்ரீராம்.
ப்ளூடிக் என்பது பிரபலங்களையும், முக்கியப் பிரமுகர்களையும் வெரிபைட் செய்து ட்விட்டர் நிறுவனமே அவர்களின் கணக்கிற்கு வழங்கும் அங்கீகாரம் ஆகும்.
கல்யாணம்
குறித்து
கசிந்த
தகவல்...
ட்விட்டர்
ட்ரெண்டிங்கில்
விக்னேஷ்
சிவன்!

காரணம் தெரியவில்லை
இது குறித்து தனது ட்விட்டரில் பிசி ஸ்ரீராம் கூறியிருப்பதாவது, "எனது கணக்கின் ப்ளூ டிக்கை திடீரென ட்விட்டர் நீக்கிவிட்டது. இது பற்றி எனக்கு எந்த பதிலும் கூறவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? ப்ளீஸ் உதவுங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முந்தைய ட்வீட்டில், கடந்த 20 நாட்களாக என் ப்ளூ டிக்கை நீக்கிவிட்டு ட்விட்டர் எந்த காரணத்தையும் சொல்லாமல் இருக்கின்றது எனத் தெரிவித்திருந்தார்.

பெயரை சொன்னாலே போதும்
இந்நிலையில் பிசி ஸ்ரீராமின் ட்விட்டுக்கு அவரது ரசிகர்கள் பலர் பதிலளித்திருக்கிறார்கள். அவர்களில் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள், ட்விட்டர் நிறுவனர் எலோன் மஸ்க் உட்பட பலரை டேக் செய்து இந்த விவகாரத்திற்கு தீர்வு கேட்டிருக்கின்றனர். மேலும், பலர் ட்விட்டர் இந்தியாவை டேக் செய்து உடனே ப்ளூடிக்கை திரும்ப கொடுக்கும் படி குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும் சிலர் பிசி-ன்னு சொன்னாலே போதும் சார் உங்களுக்கு எதுக்கு சார் ப்ளூ டிக் என்றும் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

தேங்க்யூ தி மூவி
கடந்த சில மாதங்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய படமான, 'தேங்க்யூ தி மூவி' திரைப்படத்தின் போஸ்டர்களைப் பகிர்ந்து அதற்கான புரமோசனை செய்து கொண்டிருந்தார் பிசி ஸ்ரீராம். 'தேங்க்யூ தி மூவி' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நாக சைந்தான்யாவும், ராசி கண்ணாவும் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

பெயர் சொல்லும் பிள்ளைகள்
தமிழ் சினிமாவில் இன்று ஒளிப்பதிவு துறையில் கோலோச்சி வரும் பெரும்பாலான ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராமிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பலர் உலகளவில் விருதுகளையும் குவித்து வருகின்றனர். அண்மையில் செல்வராகவன் - கீர்த்தி சுரேஸ் நடிப்பில் வெளிவந்த 'சாணி காயிதம்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினியும் பிசி ஸ்ரீராமின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.