சமந்தாவை நேருக்கு நேர் பார்த்தால்...நாக சைதன்யா இதை தான் செய்வாராம்

ஐதராபாத் : ரசிகர்களின் ஆன்ஸ்க்ரீன் மற்றும் ஆஃப் ஸ்க்ரீன் ஃபேவரைட் காதல் ஜோடியான நாகசைதன்யாவும், சமந்தாவும் 2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவை அறிவித்தனர்.

Recommended Video

Naga Chaitanya Love | மீண்டும் காதலில் விழுகிறார் நாக சைதன்யா..

பிரிவை அறிவித்த பிறகு சமந்தா - நாகசைதன்யா இருவரும் என்ன செய்தாலும், பேசினாலும் உடனடியாக அது தலைப்பு செய்தி ஆகி விடுகிறது. அந்த அளவிற்கு இவர்கள் பற்றிய விஷயங்களில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரிவை அறிவித்த பிறகு நாகசைதன்யா, லக் ஸ்டோரி, தேங்க் யூ, லால் சிங் சத்தா போன்ற பல படங்களில் நடித்து விட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். சமந்தாவும் ஏராளமான படங்கள், வெப்சீரிஸ் என வரிசையாக பலவற்றில் பிஸியாக நடித்து வருகிறார்.

கவர்ச்சியில் குதித்த சமந்தா

கவர்ச்சியில் குதித்த சமந்தா

ஒரு பக்கம் படங்களில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு புறம் அடிக்கடி சோஷியல் மீடியாவில் அதிக கவர்ச்சி காட்டிய போட்டோக்களை வெளியிட்டும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

சமந்தா சொன்ன ஷாக் தகவல்

சமந்தா சொன்ன ஷாக் தகவல்

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் இந்தியில் பிரபலமான டிவி நிகழ்ச்சியான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, தனக்கும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நல்ல உறவு கிடையாது என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதோடு, தங்கள் இருவரையும் ஒரு அறையில் இருக்க வைத்தால் கூர்மையான பொருட்கள் அனைத்தையும் நீங்கள் கண்ணில் படாமல் வைக்க வேண்டும் என்றார்.

இதே வழக்கமா போச்சு

இதே வழக்கமா போச்சு

சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிவை அறிவித்த பிறகு இவர்கள் இருவரிடமும் எடுக்கும் அனைத்து பேட்டிகளிலும் சமந்தா பற்றி நாக சைதன்யாவிடமும், நாக சைதன்யா பற்றி சமந்தாவிடமும் கேள்வி கேட்பதை மீடியாக்கள் வழக்கமாக செய்து வருகின்றன.

சமந்தாவை நேருக்கு நேர் பார்த்தால்

சமந்தாவை நேருக்கு நேர் பார்த்தால்

அந்த வகையில் சமீபத்தில் நாகசைதன்யாவிடம் பேட்டி ஒன்றில் சமந்தா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. லால் சிங் சத்தா படத்தின் ப்ரொமோஷன் விழாவில் கலந்து கொள்ள வந்த நாக சைதன்யாவிடம், தற்போது சமந்தாவை நேருக்கு நேராக பார்த்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க என கேள்வி கேட்கப்பட்டது.

நாக சைதன்யாவின் ரியாக்ஷன் என்னவா இருக்கும்

நாக சைதன்யாவின் ரியாக்ஷன் என்னவா இருக்கும்

அதற்கு பதிலளித்த நாக சைதன்யா, ஹாய் சொல்லி, ஹக் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள், அப்படியானால் நாக சைதன்யா இன்னமும் சமந்தா மீது காதலுடன் தான் இருக்கிறாரா அல்லது ஃபிரண்ட்ஷிப் அடிப்படையில் இப்படி செய்வேன் என்கிறாரா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X