»   »  பைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது 'வாட்ஸ் அப்’.... விவேக் 'வார்னிங்'!

பைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது 'வாட்ஸ் அப்’.... விவேக் 'வார்னிங்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது, சமுக பொறுப்பில்லாதவர்கள் இயக்கும் வாட்ஸ் அப். இதனால் உள்நாட்டு கலவரத்துக்கே வாய்ப்பு உள்ளது என கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.

காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் நடிகர் விவேக். தற்போது இவர் பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் விவேக்கின் ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் தாண்டி மரம் வளர்த்தல் உள்ளிட்ட சமூக விசயங்களிலும் பங்கேற்று வருகிறார் விவேக்.

இந்நிலையில், விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக வலைதளங்களின் ஆபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

ஆபத்தானது...

பைத்தியத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியைவிட ஆபத்தானது,சமுக பொறுப்பில்லாதவர்கள் இயக்கும் வாட்ஸ் அப்.உள்நாட்டு கலவரத்துக்கே வாய்ப்பு உள்ளது.

கலவரத்துக்கே வழி வகுக்கும்...

கலவரத்துக்கே வழி வகுக்கும்...

இன, மத கலவரங்களுக்கே வழி வகுக்கும். நான் சொல்வது உண்மை என்பது சில பேருக்கு தாமதமாய் புரியும்.

வாட்ஸ் அப் மூடப்படலாம்...

வாட்ஸ் அப் மூடப்படலாம்...

இருட்டில் இருந்து கொண்டு கல் எறியும் சில ஆண்மை அற்ற கோழைகளால், கூடிய விரைவில் வாட்ஸ் அப் இழுத்து மூடப்படலாம். (சீனா போல)

நல்லதை மட்டுமே பகிர வேண்டும்...

நல்லதை மட்டுமே பகிர வேண்டும்...

வாட்ஸ் அப் மட்டுமல்ல நான் சொன்னது முக நூல் டுவிட்டர்கும் பொருந்தும். மத ஒற்றுமை, இன இணக்கம்,நல்லறிவு இவற்றை மட்டும் பகிர வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The comedy actor Vivek has said that Whats app is a most dangerous weapon.
Please Wait while comments are loading...