Don't Miss!
- News
எங்கள் தரப்பில் வேட்பாளர் தயார்.. பாஜக நிலைப்பாட்டுக்கு காத்திருக்கிறோம்..ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி!
- Finance
இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கமலா தியேட்டர் பின்னாடி ஒரு வீடு. அப்படி என்ன ரகசியம் அங்கே ஒளிந்து இருக்கிறது.
சென்னை : தமிழ் திரைத்துறையில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். ஷங்கருக்கு பிறகு பிரம்மாண்ட தமிழ் இயக்குனர் என பெயரெடுத்தவர். ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்தவர்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர், இந்தியில் அமீர்கானை வைத்து கஜினி படத்தின் இந்தி ரீமேக் போன்ற படங்களை இயக்கி அங்கேயும் அவரது வெற்றிக் கொடியை நாட்டினார்.
சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு மேடை நிகழ்ச்சியில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆர்கே செல்வமணி யைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஆஸ்கர் விருது 2022.... மாற்றுத்திறனாளி நடிகர்... கருப்பின நடிகை… ஆஸ்கர் சுவாரசியம் !

சர்க்கார் பிரச்சனை
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திற்கு முன் அவர் இயக்கிய படம் சர்க்கார். விஜய் கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த அந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. சர்க்கார் திரைப்படம் அரசியல் ரீதியாக சில சிக்கல்களை சந்தித்தாலும், கதை திருட்டு விவகாரத்தில் பரவலாக பேசப்பட்ட படம். ஏ ஆர் முருகதாஸ் ஒரு உதவி இயக்குனரின் கதையை திருடி படம் எடுத்ததாக எழுத்தாளர்கள் சங்கத்தில் முறையிட, எழுத்தாளர் சங்கத் தலைவர் கே பாக்யராஜ் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சர்க்கார் படத்தின் கதை அந்த உதவி இயக்குனர் கதையின் கரு தான் என்று சொல்லி, அந்த உதவி இயக்குனரின் பெயரை டைட்டிலில் வரும்படி செய்தார். ஏ ஆர் முருகதாஸ் விருப்பமில்லாமல் அதை ஒப்புக் கொண்டார் என அப்போது சொல்லப்பட்டது.

துவண்டு எழுந்த முருகதாஸ்
சர்க்கார் படத்தில் கதை திருட்டு விவகாரத்தில் மிகவும் மனமுடைந்து போனார் ஏ ஆர் முருகதாஸ். அந்த சமயத்தில் அவர் அளித்த சில பேட்டிகளில் தான் இங்கே வந்தது நல்ல படங்களை இயக்குவதற்கு, திருட்டுப் பட்டம் வாங்குவதற்கு அல்ல என மிகக் கோபமாக பதிவு செய்தார். அந்த சமயத்தில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு வரவே சற்றே ஆறுதல் ஆனார். மீண்டும் அதே உத்வேகத்தோடு ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி முடித்தார். தர்பார் படம் உலகெங்கிலும் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக ஒரு விலங்கை வைத்து படம் எடுக்கப் போவதாக சினிமா வட்டாரங்களுக்கு பேசப்பட்டு வருகிறது.

செல்வமணி ஜெயிக்கப் பிரார்த்தனை
ஏ ஆர் முருகதாஸ் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடையில் அவர் பேசும்போது இயக்குனர் சங்க தேர்தலில் ஆர்கே செல்வமணி ஜெயிக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்தேன் என பகிர்ந்துள்ளார். ஆர்கே செல்வமணி போன்ற நல்ல மனிதர்களுக்கு தேர்தல் இருக்கக்கூடாது என்று நான் விரும்புவதாகவும், அப்படிப்பட்ட ஆட்கள் தேர்தல் இல்லாமல் அன்னபோஸ்ட் ஆக ஜெயிக்க வேண்டும் எனவும், அவர் ஜெயித்தார் நான் ஜெயித்தேன் என உணர்வுபூர்வமாக மேடையில் பகிர்ந்து கொண்டார்.

ரகசியத்தை உடைத்த ஏர் முருகதாஸ்
கொரோனா மிகத் தீவிரமாக நிலவிய காலகட்டத்தில் ஆர்கே செல்வமணி தலைவராக இருந்த இயக்குனர் சங்கம் பல தொழிலாளிகளுக்கு நிதி உதவி செய்து அவர்களை காப்பாற்றியது பற்றி ஏ ஆர் முருகதாஸ் அந்த மேடையில் சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை அங்கே தெரியப்படுத்தினார். அது ஆர்கே செல்வமணி உதவி இயக்குனராக இருந்தபோது அவர் தங்கி இருந்த இடமான கமலா தியேட்டர் பின்பக்கம் 42/5 வீட்டில் இருந்ததாகவும், அவர் காலி செய்த பிறகு தான் அந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் சொல்லிப் பூரித்துப் போனார். ஆர்கே செல்வமணி சார் எனது ஹீரோ என்றும் அவரை அணுவணுவாக ரசிப்பவன் நான் என்றும் பேசி பெருமை பட்டுகொண்டார்.