»   »  போனில் ஒரு விஷயம் சொன்ன நடிகர்: கதறி அழுத ஸ்ரீதேவியின் கணவர்

போனில் ஒரு விஷயம் சொன்ன நடிகர்: கதறி அழுத ஸ்ரீதேவியின் கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
போனி கபூரின் கள்ள காதலை மறுத்த ஸ்ரீதேவி!- வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் போன் செய்து ஒரு விஷயத்தை சொன்னதும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கதறி அழுதாராம்.

பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி உயிர் இழந்தபோது நடிகர் ஆமீர் கான் அமெரிக்காவில் இருந்தார். அதனால் அவரால் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

நேரில் வர முடியாததால் அவர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு போன் செய்து பேசியுள்ளார். இது குறித்து பிரபல சினிமா வர்த்தகரான கோமல் நஹாதா கூறியிருப்பதாவது,

ஆமீர்

ஆமீர்

ஆமீர் கான் போனி கபூருக்கு போன் செய்து ஆறுதல் கூறினார். அப்போது சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நெருங்கிய நண்பரின் மனைவி குளியல் தொட்டியில் கிட்டத்தட்ட மூழ்கிய சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

வெளிநாடு

வெளிநாடு

ஆமீரின் நெருங்கிய நண்பர் தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி குளிக்க சென்றுள்ளார். மனைவி குளியல் தொட்டியில் இருக்க அவருடன் பேச கணவர் பாத்ரூமுக்கு சென்றுள்ளார்.

நீர்

நீர்

பாத்ரூமுக்குள் சென்று பார்த்தால் அவரின் மனைவியின் முகம் நீரில் மூழ்கி இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்து பக்கத்தில் சென்று பார்த்தபோது அவர் உயிருக்கு போராடியுள்ளார்.

மனைவி

மனைவி

நண்பரின் மனைவிக்கு குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை இருந்துள்ளது. வெந்நீர் அடங்கிய குளியல் தொட்டியில் இருக்கும்போது அவருக்கு ரத்த அழுத்தம் மேலும் குறைந்துள்ளது. நல்ல வேளை நண்பர் அவரை சரியான நேரத்தில் பார்த்ததால் உயிர் பிழைத்தார். இல்லை என்றால் அவர் நீரில் மூழ்கி இறந்திருப்பார் என்று ஆமீர் போனியிடம் தெரிவித்தார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஆமீர் தனது நண்பரின் மனைவிக்கு என்ன ஆனது என்பதை கூறியதை கேட்டதும் போனி கபூர் ஸ்ரீதேவியை நினைத்து கதறி அழத் துவங்கிவிட்டார். போனி பாத்ரூம் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோதே ஸ்ரீதேவி மூச்சு பேச்சு இன்றி கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sridevi's husband Boney Kapoor started crying like a baby after actor Aamir Khan called him over phone and narrated an incident about his friend's wife.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil