»   »  தொடர்ந்து ஷூட்டிங்கால் செட்டில் மயங்கி விழுந்த அஜீத்

தொடர்ந்து ஷூட்டிங்கால் செட்டில் மயங்கி விழுந்த அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பகைவன் படப்பிடிப்பில் அஜீத் மயங்கி விழுந்ததாக இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அஜீத் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இன்டர்போல் அதிகாரியாக நடிக்கும் அஜீத் ஹெலிகாப்டர் அருகே ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் அண்மையில் வெளியாக வைரலானது.

விவேகம் படத்தில் அஜீத்தின் லுக் மெர்சலாக உள்ளது.

பிறந்தநாள்

பிறந்தநாள்

மே 1ம் தேதி அஜீத்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரின் ரசிகர்கள் தயாராகிவிட்டனர். சில ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.

அஜீத்

அஜீத்

அஜீத்துக்கு ஏகப்பட்ட அறுவை சிகைச்சைகள் நடந்துள்ளது. குறுக்கு வலியால் கஷ்டப்பட்டபோது கூட அவர் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் நடித்துக் கொடுத்தவர்.

பகைவன்

பகைவன்

அஜீத் காதல் மன்னன் படத்தோடு சேர்த்து பகைவன் படத்திலும் நடித்துள்ளார். இரவில் காதல் மன்னன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் பகலில் பகைவன் படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.

மயக்கம்

மயக்கம்

ஓய்வு இல்லாமல் நடித்துள்ளார் அஜீத். எண்ணூரில் பகைவன் பட பாடல் காட்சியை படமாக்கியபோது அஜீத் மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு பேக்கப் சொல்லாமல் 5 நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு வந்து நடித்தது அப்படத்தின் இயக்குனர் ரேஷ் பாலகிருஷ்ணன் செய்தி இணையதளத்திடம் சொல்லி தெரிய வந்துள்ளது.

English summary
Pagaivan movie director Ramesh Balakrishnan said that Ajith fainted during shooting as he was working without break at that time.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos