»   »  மோடியால் சிங்கார சென்னையில் சிங்கிள் டீக்கு சிங்கியடித்த பாடகி சின்மயி!

மோடியால் சிங்கார சென்னையில் சிங்கிள் டீக்கு சிங்கியடித்த பாடகி சின்மயி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கிள் டீ வாங்கிக் குடிக்க சில்லறை இல்லாமல் அல்லாடிய பாடகி சின்மயி மற்றும் அவரின் கணவர் ராகுலுக்கு ஏடிஎம் மைய வாட்ச்மேன் ரூ.20 கொடுத்து உதவியுள்ளார்.

கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் பலரும் சில்லறை இல்லாமல் அல்லாடுகிறார்கள். பால், காய்கறி வாங்கக் கூட சில்லறை இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

அந்த பிரச்சனை பாடகி சின்மயி மற்றும் அவரது கணவர் நடிகர் ராகுலுக்கும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சின்மயி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சில்லறை

சில்லறை

மோடி கறுப்பு பணத்தை ஒழிக்க அறிவிப்பு வெளியிட்டபோது நாங்கள் அமெரிக்காவில் இருந்தோம். இந்தியா வந்ததும் செலவுக்கு கையில் சில்லறை இல்லை.

ஏடிஎம்

ஏடிஎம்

உள்ளூர் டீக்கடையில் டீக்குடிக்க 100 ரூபாயாவது எடுக்க கணவர் ஏடிஎம் மையத்திற்கு சென்றார். ஏடிஎம் எந்திரத்தில் காலை 10 மணிக்கு பணம் போடப்பட்டது ஆனால் அது 2 மணிநேரத்திலேயே தீர்ந்துவிட்டது என்று அங்கிருந்த காவலாளி தெரிவித்தார்.

ரூ. 20

ரூ. 20

எங்கள் கையில் பணம் இல்லாத நேரத்தில் டீ குடிக்க ஏடிஎம் மைய காவலாளி 20 ரூபாய் கொடுத்தார். நம்மில் பலருக்கு நல்ல இதயம் உள்ளது என சின்மயி தெரிவித்துள்ளார்.

டெபிட் கார்டு

சின்மயி ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்டை பார்த்த ஒருவர் உங்களிடம் இருக்கும் டெபிட் கார்டை வைத்து எந்த ஹோட்டலிலும் உணவு சாப்பிடலாம் என்றார். அதை பார்த்த சின்மயி ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, எத்தனை உள்ளூர் டீக்கடைக்காரர்கள் டெபிட் கார்டுகளை ஏற்பார்கள் என்று சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

English summary
An ATM guard has given Rs. 20 to singer Chinmayi's husband so that the couple can have tea. The celebrity couple was left with no usable cash, thanks to demonetization.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil