»   »  யுஏ கொடுத்தாலும் என்னை அறிந்தால் படத்தை பாராட்டிய சென்சார் போர்டு

யுஏ கொடுத்தாலும் என்னை அறிந்தால் படத்தை பாராட்டிய சென்சார் போர்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை அறிந்தால் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியபோதிலும் படத்தில் வரும் அஜீத் கதாபாத்திரத்தை சென்சார் போர்டு உறுப்பினர்கள் பாராட்டியுள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. அஜீத் ரசிகர்கள் பேனர்கள், கட்அவுட்கள் வைத்து அசத்தி வருகிறார்கள். ரசிகர் ஒருவர் தனது தலையில் என்னை அறிந்தால் என்று வரும் வகையில் முடியை நறுக்கியுள்ளார்.


ஏற்கனவே ரசிகர்களுக்கு என்னை அறிந்தால் காய்ச்சல் வந்துவிட்டது.


சத்யதேவ்

சத்யதேவ்

படத்தில் சத்யதேவாக வரும் அஜீத் 4 கெட்டப்புகளில் நடித்துள்ளார். 13 வயது சிறுவனாக இருப்பதில் இருந்து 38 வயது வரை அஜீத் வாழ்வில் நடப்பது தான் கதை.


சென்சார் போர்டு

சென்சார் போர்டு

என்னை அறிந்தால் படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் தான் அளித்துள்ளது. சத்யதேவ் போன்று ஒரு அப்பா வேண்டும் என்று அனைத்து பெண் குழந்தைகளும் படத்தை பார்த்த பிறகு ஏங்குவார்கள் என்று சென்சார் போர்டு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


டிக்கெட்

டிக்கெட்

என்னை அறிந்தால் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய வேகத்தில் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.


வெற்றி

வெற்றி

என்னை அறிந்தால் படம் தமிழகத்தில் 500 தியேட்டர்களில் வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லரே சாதனை செய்துள்ள நிலையில் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

அனுஷ்காவும், த்ரிஷாவும் படத்தில் பெயருக்கு வந்து செல்லும் ஹீரோயின்கள் இல்லையாம். அவர்கள் இருவரின் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாம்.


English summary
Though Censor board has given U/A ceritificate to Yennai Arindhaal, its members have said, "this film will make each and every girl child yearn for a father like Sathyadev(shown in the movie)."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil