»   »  எங்கப்பா படத்தை எல்லாம் தயாரிக்க மாட்டீங்களோ?: தாணுவை கலாய்த்த தனுஷ் மகன்

எங்கப்பா படத்தை எல்லாம் தயாரிக்க மாட்டீங்களோ?: தாணுவை கலாய்த்த தனுஷ் மகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அது என்ன எங்க தாத்தா படத்தை மட்டும் தான் தயாரிப்பீர்களோ, எங்கப்பா படத்தை எல்லாம் தயாரிக்க மாட்டீங்களோ என தனுஷின் மூத்த மகன் யாத்ரா கலைப்புலி எஸ். தாணுவிடம் கேட்டுள்ளான்.

தனுஷின் மூத்த மகன் யாத்ராவுக்கு 10 வயது ஆகிறது. அவன் போயஸ் கார்டனில் உள்ள தனது தாத்தா ரஜினிகாந்த் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வந்துள்ளார்.

When Dhanush's son stuns Kalaipuli S. Thanu

அவரை வாசலிலேயே மறித்த யாத்ரா அது என்ன எங்க தாத்தா படத்தை மட்டும் தான் தயாரிப்பீர்களோ, எங்கப்பா படத்தை எல்லாம் தயாரிக்க மாட்டீங்களோ என கேட்டுள்ளான். இதை எதிர்பார்க்காத தாணு யாத்ராவை பார்த்து சிரித்துவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

ரஜினியை சந்தித்து பேசிய அவர் யாத்ரா கூறியதை தெரிவித்துள்ளார். தனது பேரன் இப்படி எல்லாம் பேசுகிறானா என்று வியந்த ரஜினி சிரித்தாராம். நீங்க வேற தாணு அவன் இப்படி தான் ஏதாவது சொல்லி என்னையும் கலாய்ப்பான் என்றாராம்.

யாத்ரா கேட்ட பிறகே தாணு தனுஷின் விஐபி 2 படத்தை தயாரிக்கிறாராம்.

English summary
Dhanush's son Yathra stunned Kalaipuli S. Thanu by asking won't he produce Dhanush's movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil