சர்வானந்த் 30-வது திரைப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது
சென்னை : பல தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
இதுவரை தயாரித்த திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் சுல்தான் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியாகி மாஸான வெற்றி பெற்றது.
இப்பொழுது தெலுங்கு நடிகர் சர்வானந்த் 30-வது படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் தேதி வெளியாகி உள்ளது.

பெரும்பாலும் கார்த்தியின்
நடிகர் கார்த்தியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான சகுனி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ். ஆர்.பிரபு அதைத் தொடர்ந்து தயாரித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெரும்பாலும் கார்த்தியின் திரைப்படங்களை தயாரித்துள்ளது.

சுல்தான்
ஜோக்கர்,காஷ்மோரா,சகுனி, கூட்டத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று,அருவி, என் ஜி கே மற்றும் சமீபத்தில் வெளியான சுல்தான் என வெற்றி படங்களின் வரிசை நீண்டுகொண்டே செல்கிறது. இதுவரை குறைந்த பட்ஜெட்டில் மட்டுமே படங்களை தயாரித்து வந்த எஸ்ஆர் பிரபு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்த சுல்தான் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. அடுத்து சிபிராஜ் நடிக்கும் வட்டம் படத்தை தயாரித்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு
இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சர்வானந்த் 30வது படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வானந்த் தமிழில் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, எங்கேயும் எப்போதும், காதல்னா சும்மா இல்ல, நாளை நமதே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக எங்கேயும் எப்போதும் இவரை தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைய செய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மஹா சமுத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது.

ஜூன் 28 ஃபர்ஸ்ட் லுக்
தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ள சர்வானந்த் 30வது படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்க அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 28-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











