Kanthara OTT: ‘காந்தாரா சாப்டர் 1‘ ஓடிடி ரிலீஸ் எப்போ? ரிஷப் ஷெட்டி கொடுத்த அப்டேட்!

சென்னை: ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அக்டோபர் 2ந் தேதி தியேட்டரில் வெளியானது. பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான இப்படம் வெற்றி அடைந்துள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில், சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

ரிஷப் ஷெட்டியின் முந்தைய படைப்பான 'காந்தாரா' படம் 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் முதல் பாகமான 'காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதிகளில் நடக்கும் பழங்கால நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே சமூக வலைத்தளங்களில் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். படம் வெளியாகி 17 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படம் உலக அளவில் 725 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kantara Chapter 1 OTT 1
Photo Credit:

ரிஷப் ஷெட்டி: காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில், சாமி தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அதில்,
காந்தாரா திரைப்படமே ஈஸ்வரனின் கிணற்றைப் பற்றியும், காவல் தெய்வத்தை பற்றிய கதை தான். காந்தாரா படத்தில் அதைத்தான் சொல்லி இருக்கிறோம், படம் நல்ல படியாக முடிந்து, படம் வெளியாகி படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கி இருக்கிறார்கள். இதில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ரசிகர்கள் அந்த படத்திற்கு கொடுத்த ஆசீர்வாதத்தால் தான் படம் வெற்றி பெற்று இவ்வளவு தூரத்திற்கு வந்து இருக்கிறது. அதற்காக நன்றி சொல்வதற்காகத்தான் நான் இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல தரிசனம் கிடைத்தது, நிறைய நேரம் இருந்தது என் மனதில் இருக்கும் அனைத்தையும் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்.

ஓடிடி ரிலீஸ்: காந்தாரா திரைப்படம் டப்பிங் திரைப்படமாக இருந்தாலும் தமிழக மக்கள் வெற்றி படமாக்கி இருக்கிறார்கள். காந்தாரா சாப்டர் 1 படம் விவசாயம், கிராம வாழ்கையை பிரதிபலித்ததால் மக்களுக்கு பிடித்து இருக்கிறது. நீங்கள் கொடுத்த அன்பு, ஆதரவு அடுத்த படத்திற்கு பெரிய தைரியத்தை கொடுத்து இருக்கிறது. அடுத்த படத்தில் இவை அனைத்தையும் நான் கருத்தில் கொண்டு, நீங்கள் ரசித்து கொண்டாடும்படி மற்றுமொரு சிறந்த படத்தை நிச்சயமாக உங்களுக்கு கொடுப்பேன். காந்தாரா சாப்டர் 1 திரைப்படம். இப்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதால், ஓடிடிக்கு வருவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும். ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு நிச்சயமாக அறிவிக்கப்படும். படத்தின் வசூல் குறித்த விவரத்தை ஒவ்வொரு வாரமும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது. இந்த படத்தின் இயக்குனர், நடிகர்,எழுத்தாளர் என்ற முறையில் மக்கள் இந்த படத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணமாக இருக்கிறது என்று ரிஷப் ஷெட்டி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X