»   »  ஸ்ரீதேவியின் தலையில் குண்டை தூக்கிப் போட்ட மகள் ஜான்வி

ஸ்ரீதேவியின் தலையில் குண்டை தூக்கிப் போட்ட மகள் ஜான்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மூத்த மகள் ஜான்வி ஒரு உண்மையை கூறி தனது தலையில் குண்டை தூக்கிப் போட்டதாக பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி மாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் எப்பொழுது பாலிவுட்டில் அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவி கூறியதாவது,

குழந்தைகள்

குழந்தைகள்

படங்களில் நடிக்க வேண்டுமே என்பதற்காக நான் நடிப்பது இல்லை. எனக்கு என் குழந்தைகள் தான் முக்கியம். இங்கிலிஷ் விங்கிலிஷ் பட ஸ்ஷெட்யூல் எனக்கு வசதியாக இருந்தது.

படங்கள்

படங்கள்

என்னை பிசியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னை தேடி வரும் படங்களை எல்லாம் ஒப்புக் கொள்வது இல்லை. எனக்கு கதை பிடித்திருக்க வேண்டும், என் கதாபாத்திரம் பிடித்திருக்க வேண்டும்.

மனம்

மனம்

என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படியே நடப்பேன். 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு செய்தவைகளை தற்போது செய்ய முடியாது. என் குழந்தைகள் என்னை பார்த்து பெருமைப்பட வேண்டும்.

ஜான்வி

ஜான்வி

என் மூத்த மகள் ஜான்வி என்னை போன்றவள். அவளைப் பார்க்கும்போது என்னை பார்ப்பது போன்று உள்ளது. இளைய மகள் குஷி மிகவும் துணிச்சலான பெண்.

நடிகை

நடிகை

ஜான்வி நடிகையாவதை நான் விரும்பவில்லை. ஒருமுறை ஜான்வியிடம் நீ என்னவாக வேண்டும் என்று யாரோ கேட்டதற்கு டாக்டராக வேண்டும். நிஜத்தில் அல்ல படத்தில் என்றார்.

குண்டு

குண்டு

ஜான்வி நடிகையாக வேண்டும் என்று தீர்மானித்து அதை தெரிவித்தபோது என் தலையில் குண்டை தூக்கிப் போட்டது போன்று இருந்தது. ஆனால் எனக்கு என் மகளின் சந்தோஷம் தான் முக்கியம் என்றார் ஸ்ரீதேவி.

English summary
When Jhanvi Kapoor confessed that she wants to be an actress, mom Sridevi felt as though her daughter dropped a bomb on head.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil