»   »  எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சூர்யாவுக்கு 'நோ' சொன்ன கலாபவன் மணி

எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சூர்யாவுக்கு 'நோ' சொன்ன கலாபவன் மணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் எஸ்3 படத்தில் வில்லனாக நடிக்குமாறு வந்த வாய்ப்பை ஏற்க கலாபவன் மணி மறுத்தது தற்போது தெரிய வந்துள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்3ல் வில்லனாக கலாபவன் மணியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கின்றனர். இதையடுத்து சூர்யா மற்றும் படக்குழுவினர் கலாபவன் மணியை அணுகி படத்தில் வில்லத்தனம் செய்ய வருமாறு அழைத்துள்ளனர்.

When Kalabhavan Mani said NO to Suriya

அதற்கு மணியோ, எனக்கும் உங்கள் படத்தில் நடிக்க ஆசை தான். ஆனால் எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதை கேட்ட சூர்யாவோ, பெரிய சண்டைக் காட்சிகளில் எல்லாம் நீங்கள் நடிக்க வேண்டாம் ஆனால் என் படத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

சண்டை காட்சி என்ன சாதாரண காட்சியிலும் நடிக்க முடியாத நிலையில் உள்ளேன். என்னால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது என்று சூர்யாவிடம் கூறியுள்ளார் மணி. மேலும் தன்னைத் தேடி இந்த வாய்ப்பு வந்ததை யாரிடமும் கூற வேண்டாம் என்று அவர் எஸ்3 குழுவினரை கேட்டுக் கொண்டுள்ளார்.

குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த மணியின் உடல்நலம் பற்றி மலையாள திரையுலகினர் பலருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. அவர் இறந்த செய்தி அறிந்த பல பிரபலங்கள் என்னது, மணி மருத்துவமனையில் இருந்தாரா எங்களுக்கு தெரியவே தெரியாதே என்று வியப்பில் ஆழ்ந்தனர்.

English summary
Kalabhavan Mani refused to act as villain in Suriya starrer S3 owing to his health condition.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil