»   »  கமல் பேச்சை கேட்டு செம்ம்ம கடுப்பான நமீதா: இந்தா சூடு பிடிக்குதுல்ல பிக் பாஸு!

கமல் பேச்சை கேட்டு செம்ம்ம கடுப்பான நமீதா: இந்தா சூடு பிடிக்குதுல்ல பிக் பாஸு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்தி பற்றி பேசி நமீதாவை கடுப்பேற்றியுள்ளார் கமல் ஹாஸன்.

உலக நாயகன் கமல் ஹாஸன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 25ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில் ஓவியா, அனுயா என்று அவ்வளவாக பிரபலம் இல்லா ஆட்கள் தான் உள்ளனர்.

இந்நிலையில் நம்ம மச்சான்ஸ் புகழ் நமீதா பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

கமல்

கமல்

கமல் ஹாஸன் ஒரு நாத்திகவாதி. அவர் பக்தி பற்றி பேசி பல முறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பக்தி பற்றி பேசியுள்ளார்.

நமீதா

நமீதா

அண்மை காலமாக நமீதாவுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்துள்ளது. இது குறித்து அறிந்த கமல் அவரிடம் ஆன்மீகம் பற்றி பேசினார். கடவுளிடம் பேசுவீர்களா என்று கமல் நமீதாவிடம் கேட்டார். அதற்கு அவர் ஆம் என்றார்.

பக்தி

பக்தி

நாம் கடவுளிடம் பேசினால் அது பக்தி. கடவுள் நம்மிடம் பேசினால் அது பைத்தியம் என்று கூறி சிரித்தார் கமல். இதை கேட்ட நமீதாவுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

சமாளி

சமாளி

நமீதா கடுப்பாக அதை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்தார். உடனே கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கமலிடம் சண்டை போடாமல் அமைதியாக இருந்துவிட்டார். பிக் பாஸ் வீடு என்றாலே கோபம், சண்டை, கிசுகிசு சிலநேரம் மல்லுக்கட்டு கூட நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
When Kamal Haasan spoke about devotion to God in his own way at Big Boss house, Namitha got really irritated.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil