»   »  தன்னை 'அண்ணா' என கூப்பிடச் சொல்லிய காவ்யாவையே மணந்த நடிகர் திலீப்

தன்னை 'அண்ணா' என கூப்பிடச் சொல்லிய காவ்யாவையே மணந்த நடிகர் திலீப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை காவ்யா மாதவன் ஒரு காலத்தில் அங்கிள் என்று அழைத்த நடிகர் திலீப்பையே திருமணம் செய்துள்ளார். திலீப் காவ்யாவை தன்னை அண்ணன் என அழைக்குமாறு கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காவ்யா மாதவனும், நடிகர் திலீப்பும் கடந்த வெள்ளிக்கிழமை கொச்சியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திடீர் என நடந்த இந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

திடீர் திருமணத்தால் மலையாள திரையுலகம் வியப்படைந்தது.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

காவ்யா தனது 7வது வயதில் குழந்தை நடசித்திரமாக மலையாள திரையுலகிற்கு வந்தார். அவர் கமலின் இயக்கத்தில் வெளியான பூக்காலம் வரவாயி படத்தின் மூலம் மல்லுவுட்டுக்கு வந்தார்.

அங்கிள்

அங்கிள்

பூக்காலம் வரவாயி படத்தில் திலீப் துணை இயக்குனராக இருந்தார். அப்போது குழந்தை நட்சத்திரமான காவ்யா திலீப்பை அங்கிள் என அழைத்துள்ளார்.

அண்ணா

அண்ணா

தன்னை அங்கிள் என காவ்யா அழைத்ததால் திலீப் அதிர்ச்சி அடைந்தார். என்னை அங்கிள் என்று கூப்பிடாதே அண்ணா என்று கூப்பிடு என அவர் காவ்யாவிடம் தெரிவித்துள்ளார். திலீப் காவ்யாவை விட 16 வயது மூத்தவர்.

திருமணம்

திருமணம்

திலீப் தனது மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்ய காவ்யா மாதவனுடனான நெருங்கிய தொடர்பே காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது. காவ்யா ஹீரோயின் ஆன பிறகு அவரின் முதல் ஹீரோ திலீப் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Kavya Madhavan once called actor Dileep as uncle. Instead Dileep asked her to call him as brother.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil