»   »  இந்தியா-பாக். போட்டிக்கு முன்பு 'கடத்தப்பட்ட' கோஹ்லி: வீடியோ இதோ

இந்தியா-பாக். போட்டிக்கு முன்பு 'கடத்தப்பட்ட' கோஹ்லி: வீடியோ இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என்னது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு முன்பு விராட் கோஹ்லி கடத்தப்பட்டாரா என்று யாரும் பதட்டம் அடைய வேண்டாம். அவர் கடத்தப்பட்டது நிஜத்தில் அல்ல.

ரோஹித் தவான் இயக்கியுள்ள இந்தி படம் டிஷூம். ஜான் ஆபிரகாம், வருண் தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் ஜூலை மாதம் 29ம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தில் அக்ஷய் குமாரும், நர்கிஸ் ஃபக்ரியும் கவுரவ வேடத்தில் வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு முன்பு விராட் கோஹ்லி கடத்தப்படுவது போன்று காண்பித்துள்ளனர்.

கோஹ்லி கதாபாத்திரத்தில் சாகிப் சலீம் நடித்துள்ளார். பார்க்க கோஹ்லி போன்றே இருக்கும் சாகிப் விராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் தான் முக்கிய போட்டிக்கு முன்பு கடத்தப்பட்டார். படத்தில் தான் கோஹ்லி போன்று நடித்தவர் கடத்தப்பட்டார். அதனால் யாரும் டென்ஷனாக வேண்டாம்.

படத்தின் கதையே விராட் அதாங்க விராஜ் கடத்தலை சுற்றி தான் நகர்கிறது. நம்ம கோஹ்லி அனுஷ்காவுடனான காதலை புதுப்பித்துவிட்டு சந்தோஷமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Don't get panic, Virat Kohli was not kidnapped in real life but in reel life and that is for the upcoming Bollywood movie Dishoom.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil