»   »  சிம்புன்னா வம்பா, 'ஏஏஏ' ரிலீஸ் எப்பொழுது?: இயக்குனர் ஆதிக் விளக்கம்

சிம்புன்னா வம்பா, 'ஏஏஏ' ரிலீஸ் எப்பொழுது?: இயக்குனர் ஆதிக் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு அப்படி, இப்படி என்று பல மோசமான விஷயங்களை என்னிடம் கூறினார்கள். ஆனால் அவர் அப்படி இல்லை. அவருடன் பணியாற்றுவது வசதியாக உள்ளது என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். மதுர மைக்கேல், அஷ்வின் தாத்தா உள்பட 4 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சிம்பு.


படம் எப்ப சார் ரிலீஸாகும் என்று ரசிகர்கள் கேட்கும் நிலையில் ஆதிக் கூறியிருப்பதாவது,


சிம்பு

சிம்பு

என் திரைக்கதை ஒரு படத்திற்கு மிகவும் நீளமானது என சிம்பு சார் நினைத்தார். மதுர மைக்கேல் மற்றும் அஷ்வின் தாத்தா போர்ஷன்களை படமாக்கியதும் போட்டுப் பார்த்தால் அதுவே 2 மணிநேரம் 40 நிமிடங்கள் ஓடியது.


இரண்டு படம்

இரண்டு படம்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளோம். 85 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நாங்கள் ஏற்கனவே படமாக்கியவற்றில் பல இரண்டாம் பாகத்தில் பயன்படுத்தப்படும். இரண்டாம் பாகத்தில் சிம்பு ஒல்லியாக இருப்பார்.


உடல் எடை

உடல் எடை

உடல் எடையை குறைப்பது எளிது அல்ல. விக்ரம் சார், கமல் சாருக்கு அது பழக்கம். குறிப்பிட்ட நேரத்தில் எடையை குறைப்பது சிம்பு சாருக்கு சாத்தியம் அல்ல.


சிம்பு சார்

சிம்பு சார்

சிம்பு அப்படி, இப்படி என்று பல மோசமான விஷயங்களை என்னிடம் கூறினார்கள். ஆனால் அவர் அப்படி இல்லை. அவருடன் பணியாற்றுவது வசதியாக உள்ளது.


அஷ்வின் தாத்தா

அஷ்வின் தாத்தா

அஷ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்கு சிம்பு சார் 3 மூன்று மணிநேரம் மேக்கப் போட வேண்டும். முதலில் அவருக்கு கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அட்ஜெஸ்ட் செய்து கொண்டார்.


நம்பிக்கை

நம்பிக்கை

சிம்பு சார் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் மானிட்டர் பக்கம் வந்து நடித்துள்ளது எப்படி வந்திருக்கிறது என்பதை கூட பார்க்க மாட்டார். இந்த படத்திற்கு சிம்பு சார் தான் இசையமைப்பதாக இருந்தது. அவரிடம் 1, 500 பாடல்கள் உள்ளன.


ரம்ஜான்

ரம்ஜான்

படத்தின் முதல் பாகம் ரம்ஜானுக்கு ரிலீஸாகும். இரண்டாம் பாகம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும். சிம்பு படம் என்றாலே தள்ளிப் போகும் என்ற எண்ணத்தை மாற்ற விரும்புகிறேன் என்றார் ஆதிக்.


English summary
Adhik Ravichandran said that Simbu is a director's hero and listen to him. Anbanavan Asaradhavan Adangadhavan will be released in two parts while first will be released for Ramzan, he added.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil