»   »  மணி சார் லேசா முதுகை தட்டினாவே அன்னைக்கு நைட் தூக்கம் வராது: கார்த்தி

மணி சார் லேசா முதுகை தட்டினாவே அன்னைக்கு நைட் தூக்கம் வராது: கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: மணி சார் அவ்வளவாக பேச மாட்டார். அவரிடம் இருந்து பாராட்டு பெற்றால் அது பெரிய விஷயம். அன்று இரவு நமக்கு மகிழ்ச்சியில் தூக்கமே வராது என கார்த்தி தெரிவித்துள்ளார்.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான காஷ்மோரா படம் ஹிட்டாகியுள்ளது. வித்தியாசமான முயற்சி செய்து கஷ்டப்பட்டு உழைத்தது வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சியில் உள்ளார் கார்த்தி.

இந்நிலையில் கொச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

நல்ல படங்கள்

நல்ல படங்கள்

லால் சார், மம்மூட்டி சார், நிவின், துலகர் படங்கள் போன்று நல்ல படங்கள் எங்கும் ஓடும். மொழி ஒரு விஷயம் அல்ல. ஒரு படம் நன்றாக இருந்தால் அதை ரீமேக் செய்வார்கள் அல்லது ஒரே நேரத்தில் பல மொழிகளில் ரிலீஸ் செய்வார்கள்.

மலையாளம்

மலையாளம்

மலையாள திரையுலகை சேர்ந்த பலரை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். பல இயக்குனர்கள் கதையுடன் வந்து என்னை பார்க்கிறார்கள். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

தெலுங்கு

தெலுங்கு

பிற மொழி படத்தில் நடிப்பது எளிது இல்லை. நான் தெலுங்கில் ஊபிரி படத்தில் நடித்தது சவாலாக இருந்தது. ஏன் என்றால் எனக்கு பழக்கம் இல்லாத மொழி படத்தில் நடித்தேன். மலையாளத்தில் மனதை கவரும் கதைக்காக காத்திருக்கிறேன்.

மணிரத்னம்

மணிரத்னம்

மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் போர் விமானத்தை இயக்கும் பைலட்டாக நடித்துள்ளேன். என்னை அந்த கதாபாத்திரத்தில் வேறு எந்த இயக்குனரும் நினைத்துக் கூட பார்க்காத போது மணி சார் என்னை தேர்வு செய்துள்ளார்.

பாராட்டு

பாராட்டு

மணி சார் அவ்வளவாக பேச மாட்டார். அவரிடம் இருந்து பாராட்டு பெற்றால் அது பெரிய விஷயம். அவர் பாராட்டி லேசாக முதுகை தட்டினாலே அன்று இரவு நமக்கு மகிழ்ச்சியில் தூக்கமே வராது.

English summary
Actor Karthi says when man of few words director Maniratnam pats back as a gesture of appreciation one cannot sleep that night.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil