»   »  சின்னப் புள்ளையாக இருக்கிறதே: ஜெயலலிதாவுடன் நடிக்க தயங்கிய எம்.ஜி.ஆர்.

சின்னப் புள்ளையாக இருக்கிறதே: ஜெயலலிதாவுடன் நடிக்க தயங்கிய எம்.ஜி.ஆர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்க எம்.ஜி.ஆர். தயங்கினாராம்.

பார்ட்டி ஒன்றில் நடிகை சந்தியாவுடன் வந்த அவரது மகளை பார்த்த இயக்குனர் பி.ஆர். பந்துலு அவரை தனது சின்னட கொம்பே கன்னட படத்தில் ஹீரோயினாக்கினார். அது தான் ஜெயலலிதா ஹீரோயினாக நடித்த முதல் படம்.

When MGR was reluctant to act with Jayalalithaa

அதன் பிறகு பந்துலு தான் தயாரித்து இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் ஜெயலலிதாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார். படத்தின் நாயகனான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ 17 வயது சிறுமியுடன் போய் எப்படி ஜோடியாக நடிப்பது என்றாராம்.

சின்னப் பிள்ளையாக உள்ளது என்று கூறி எம்.ஜி.ஆர். நடிக்க தயங்க பந்துலு தான் அவரை சமாதானம் செய்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அதன் பிறகு எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் சேர்ந்து 27 படங்களில் நடித்தனர். ஆக மொத்தம் 28 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, MGR was reluctant to act with 17-year old girl Jayalalithaa in Aayirathil Oruvan. He felt that she was too young for him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil