»   »  ராத்திரியில் நிஜ பேயை துரத்திக் கொண்டு சுடுகாட்டுக்கு ஓடிய மொட்டை ராஜேந்திரன்

ராத்திரியில் நிஜ பேயை துரத்திக் கொண்டு சுடுகாட்டுக்கு ஓடிய மொட்டை ராஜேந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பேயை துரத்தி ஓடிய மொட்டை ராஜேந்திரன்- வீடியோ

சென்னை: பேய் படத்தில் நடித்த போது மொட்டை ராஜேந்திரன் இரவு நேரத்தில் சுடுகாட்டுக்கு ஓடிய சம்பவம் படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்தது.

காமெடி கலந்த பேய் படம் மோகனா. ஆர்.ஏ. ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன், கல்யாணி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1980ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள திருமால்பூர் கிராமத்தில் நடந்த பேய் சம்பவங்களை படமாக்கியுள்ளனர்.

பண்ணையார்

பண்ணையார்

மோகனா படத்தில் மொட்டை ராஜேந்திரன் பண்ணையாராக நடித்துள்ளார். மேலும் பெண் விஷயத்தில் வீக்கானவராகவும் நடித்துள்ளார். கல்யாணி நாயர் பேயாக நடித்திருக்கிறார்.

சுடுகாடு

சுடுகாடு

கல்யாணி நாயர் பேய் என்று தெரியாமல் அவர் மீது ஆசைப்பட்டு அவரை அடைய மொட்டை ராஜேந்திரன் துரத்தும் காட்சி உள்ளது. ராஜேந்திரன் தனது பங்களாவில் இருந்து சுடுகாடு வரை பேயை துரத்திச் சென்று கட்டிப்பிடிக்கும் காட்சியை படமாக்கினார்கள்.

பயம்

பயம்

ராஜேந்திரன் பேயை துரத்திக் கொண்டு பங்களாவில் இருந்து சுடுகாடு வரை ஓடியுள்ளார். ஆனால் பேயாக நடித்த கல்யாணி நாயரோ செட்டில் இருக்க அவர் ஓடிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

கல்யாணி நாயர்

கல்யாணி நாயர்

திருமால்பூரில் இறந்த போன பெண் ஒருவரின் ஆவி கல்யாணி நாயரின் உடம்புக்குள் புகுந்து பவர்ஸ்டார் சீனிவாசனை மிரட்டியதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

English summary
According to reports, Mottai Rajendran chased a real ghost and ran till graveyard in the night while filming an upcoming movie titled Mohana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X