Don't Miss!
- News
மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து-உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அப்பீல்
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Technology
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
கட்டுனா அவள கட்டணும் டா.. 7 ஆண்டுகளாக நாக சைதன்யா யாரை திருமணம் செய்ய காத்திருந்தார் தெரியுமா?
சென்னை: நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்து கொண்டது ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சினிமாவில் சிறகை விரித்து பறக்க நினைத்த நடிகை சமந்தாவுக்கு திடீரென மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், திருமணம் செய்து கொண்டால் அவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என நாக சைதன்யா 7 ஆண்டுகளாக காத்திருந்த சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
சோதனையான நேரம்?இன்னும் எத்தனை பேரை தாக்குமோ?..சமந்தா போல அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை!

நாக சைதன்யா டேட்டிங்
பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுடன் வெளிநாட்டில் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக போட்டோக்களுடன் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகை சமந்தாவை விவாகரத்து செய்வதற்கு காரணமே சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா நெருக்கமாக பழகி வந்தது தான் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பின.

சமந்தாவுக்கு சிகிச்சை
மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா அந்த நோயில் இருந்து குணமடைய கேரளாவில் பிரத்யேக ஆயுர்வேத சிகிச்சை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் கூட நடிகை சமந்தா திடீரென எழுந்து நிற்க கூட முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டார் என வதந்தி கிளம்பிய நிலையில், மருத்துவமனையில் எல்லாம் அனுமதிக்கவில்லை என சமந்தா தரப்பு விளக்கம் அளித்திருந்தது.

காதல் திருமணம்
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஏ மாய சேசாவே படத்தின் மூலம் சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து முதன் முறையாக நடித்தனர். அந்த படத்தில் நடித்ததில் இருந்தே சமந்தா மீது நாக சைதன்யாவுக்கு காதல் ஏற்பட பல ஆண்டுகள் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கட்டுனா அவளை கட்டணும்
சமந்தா மருத்துவமனையில் இருந்த போது நடிகர் நாக சைதன்யா நேரடியாக சென்று நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின. மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றும் அவர் கூறியதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், நாக சைதன்யாவின் த்ரோ பேக் பேட்டி ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. அதில், சுமார் 7 ஆண்டுகளாக சமந்தாவை இம்ப்ரஸ் செய்ய ஏகப்பட்ட முயற்சிகள் செய்தேன் என்றும், திருமணம் செய்து கொண்டால் சமந்தாவை தான் திருமணம் செய்து கொள்வது என்கிற முடிவோடு இருந்தேன் எனக் கூறியுள்ளார்.

பிரிந்த காதல் ஜோடி
கொரோனா லாக்டவுன் சமயத்தில் நடிகை சமந்தாவுக்கு பிறந்தநாள் வந்த போது தானே ஹோம் மேட் கேக் எல்லாம் செய்து நாக சைதன்யா காதலோடு பிறந்தநாள் கொண்டாடினார். இப்படியொரு காதல் ஜோடி திடீரென பிரிந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தாலும், இனிமேல் அது நடக்காது என்பது போன்ற தகவல்கள் தான் வெளியாகி வருகின்றன.