»   »  மாட்டிறைச்சி என நினைத்து எலியை சாப்பிட்ட ஜேம்ஸ் பாண்டு நடிகர்

மாட்டிறைச்சி என நினைத்து எலியை சாப்பிட்ட ஜேம்ஸ் பாண்டு நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் மாட்டிறைச்சி என்று நினைத்து எலித் தோலை சாப்பிட்டுவிட்டு ஒரு வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

முன்னாள் ஜேம்ஸ் பாண்டு நடிகர் பியர்ஸ் பிராஸ்னன்(63.) அவர் மிஸ்டர் ஜான்சன் படப்பிடிப்புக்காக நைஜீரியா சென்ற இடத்தில் நடந்த சம்பவத்தை மறக்க முடியாமல் உள்ளார்.

When Pierce Brosnan Was Sick For A Week After Eating Rat

இது குறித்து அவர் கூறுகையில்,

மிஸ்டர் ஜான்சன் படப்பிடிப்புக்காக நைஜீரியா சென்றிருந்தேன். ஒரு நாள் இரவு சாப்பிட டவுனுக்கு சென்றிருந்தோம். அப்போது ஒரு கடையில் குச்சியில் மாட்டி வைத்து இறைச்சி விற்பனை செய்தார்கள்.

மாட்டிறைச்சி என்று நினைத்து வாங்கி சாப்பிட்டேன். அதன் பிறகே அது எலித்தோல் என்று தெரிந்தது. அதை சாப்பிட்டுவிட்டு ஒரு வாரம் உடல் நலம் பாதிக்கப்பட்டேன் என்றார்.

English summary
Actor Pierce Brosnan says he mistakenly ate rat while shooting for a film in Nigeria. The 63-year-old actor says he thought he had been offered beef and was left feeling ill after eating the rodent skin.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil