»   »  நான் ரஜினியை இயக்கினால் யாருக்கும் வசனமே கேட்கக் கூடாது: ராஜமவுலி

நான் ரஜினியை இயக்கினால் யாருக்கும் வசனமே கேட்கக் கூடாது: ராஜமவுலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கினால் முதல் 10 நாட்களுக்கு தியேட்டரில் யாருக்குமே ரஜினி பேசும் வசனமே கேட்கக் கூடாது என ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா உள்ளிட்டோரை வைத்து பாகுபலி என்கிற பிரமாண்ட படத்தை எடுத்து வெளியிட்டு உலக சினிமாவை தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.எஸ். ராஜமவுலி.

தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

ரஜினி

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்கு ராஜமவுலி ஒன்றும் விதிவிலக்கு அல்ல.

ராஜமவுலி

ராஜமவுலி

எல்லா இயக்குனர்களை போன்றும் நானும் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் முதல் 10 நாட்களுக்கு தியேட்டருக்கு செல்லும் யாருக்கும் ரஜினி பேசும் வசனம் கேட்கக் கூடாது என்கிறார் ராஜமவுலி.

விசில்

விசில்

என்னது 10 நாட்களுக்கு யாருக்கும் வசனமே கேட்கக் கூடாதா என்று கேட்டால், ரஜினி பேசும் வசனம் கேட்காத அளவுக்கு தியேட்டர்களில் விசில் பறக்கணும், கைத்தட்டலாக இருக்கணும் என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

நடக்குமா?

நடக்குமா?

ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் விரும்பும்போது அவர் ரஜினியை வைத்து மெகா ஹிட் கொடுக்க விரும்புகிறார். ராஜமவுலியின் ஆசையை ரஜினி நிறைவேற்றி வைப்பாரா?

English summary
SS Rajamouli said that if directs a Rajinikanth movie, no one should hear Super Star's dialogues for the first ten days in the theatres.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil