»   »  ரஞ்சித்துக்கு பயந்த ரஜினி... அந்த அளவிற்கு கொடுமைப்படுத்தினாரா ரஞ்சித்?

ரஞ்சித்துக்கு பயந்த ரஜினி... அந்த அளவிற்கு கொடுமைப்படுத்தினாரா ரஞ்சித்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கபாலி படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. கபாலி படத்தில் ரஜினியின் நடிப்பை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இல்லை என்பது பலரது குற்றச்சாட்டாக உள்ளது.

கபாலி படம் முடித்தவுடன், ரஜினிக்குப் படத்தைப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். படம் பார்த்து முடித்தவுடன், "ரஞ்சித் சார்... என்ன சொன்னீங்களோ அப்படி எடுத்திருக்கீங்க. இது ரஞ்சித் படம் என்று பாராட்டியிருக்கிறார்.

ரஜினியும் கபாலிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இரவு நேர படப்பிடிப்பை எப்போதும் தவிர்த்து வந்த அவர் கபாலிக்காக இரவு நேரங்களிலும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக்கொடுத்தாராம்.

ரஞ்சித்துக்கு பயந்த ரஜினி

ரஞ்சித்துக்கு பயந்த ரஜினி

பல காட்சிகளில் நடித்துவிட்டு, ரஞ்சித் இன்னொரு டேக் கேட்டுவிடுவாரோ என்று பயந்திருக்கிறார் ரஜினி. ஜான் விஜய்யுடன் முதல் காட்சி நடித்து முடித்துவிட்டு...என்னங்க... இப்படிப் பார்க்கிறார். இன்னொரு டேக் கேட்டுவிடுவாரோ? 14 வருடங்களில் யாருமே என்னிடம் இன்னொரு டேக் கேட்டதே இல்லை... என்று ஜான் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி.

டேக் கேட்காதீர்கள்

டேக் கேட்காதீர்கள்

ஒரு காட்சி முடிந்த உடன் ரஞ்சித்தும் எழுந்து நடந்து வர, ரஜினி நேரடியாகச் சென்று இதுதான் நான் நடித்ததிலேயே சிறப்பான நடிப்பு. இன்னொரு டேக் மட்டும் கேட்டுவிடாதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது என்று சொன்னாராம்.

டப்பிங் பேசிய ரஜினி

டப்பிங் பேசிய ரஜினி

ரஜினி எப்போதுமே டப்பிங் பேசும் போது வேறு யாரையும் தன்னுடன் இருக்க அனுமதிப்பதில்லை. டப்பிங் பேசும் போது தனிமையை விரும்புகிறவர் ரஜினி. கபாலியிலும் டப்பிங் பேசிய முதல் நாளில் ரஜினி தனியாகவே இருந்திருக்கிறார்.

டேக் கேட்காதீர்கள்

டேக் கேட்காதீர்கள்

ஒரு காட்சி முடிந்த உடன் ரஞ்சித்தும் எழுந்து நடந்து வர, ரஜினி நேரடியாகச் சென்று இதுதான் நான் நடித்ததிலேயே சிறப்பான நடிப்பு. இன்னொரு டேக் மட்டும் கேட்டுவிடாதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது என்று சொன்னாராம்.

டப்பிங் பேசிய ரஜினி

டப்பிங் பேசிய ரஜினி

ரஜினி எப்போதுமே டப்பிங் பேசும் போது வேறு யாரையும் தன்னுடன் இருக்க அனுமதிப்பதில்லை. டப்பிங் பேசும் போது தனிமையை விரும்புகிறவர் ரஜினி. கபாலியிலும் டப்பிங் பேசிய முதல் நாளில் ரஜினி தனியாகவே இருந்திருக்கிறார்.

திருப்தி படாத ரஞ்சித்

திருப்தி படாத ரஞ்சித்

இயக்குனர் ரஞ்சித்துக்கு அந்த டப்பிங் திருப்தி இல்லாமல் தானும் உடன் இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ரஜினி உடனே சம்மதித்துவிட்டாராம். அத்துடன் டப்பிங் முடிந்த பிறகு முதல் நாளில் பேசிய திருப்தி இல்லாத பகுதிகளையும் இன்னொரு முறை பேச வைத்து பதிவுசெய்துவிட்டாராம் ரஞ்சித்.

கொடுமை படுத்திட்டாரே

கொடுமை படுத்திட்டாரே

இதனால் டப்பிங் முடிந்தவுடன் ரஞ்சித்திடம் பேசிய ரஜினி, "என்னை இதுவரைக்கும் சினிமாவில் இரண்டு பேர்தான் கொடுமைப்படுத்தி இருக்காங்க. நீ மூணாவது ஆள்" என்று புன்னகையுடன் கூறிவிட்டு சென்றாராம்.

English summary
During the Kabali shooting director Ranjih used Rajinikanth as much as possible in various ways

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil