»   »  கலாபவன் மணிக்காக மணிக் கணக்கில் காத்திருந்த ரஜினி, ஐஸ்வர்யா ராய்

கலாபவன் மணிக்காக மணிக் கணக்கில் காத்திருந்த ரஜினி, ஐஸ்வர்யா ராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்திரன் படப்பிடிப்பின்போது கலாபவன் மணிக்காக ரஜினிகாந்தும், ஐஸ்வர்யா ராயும் பல மணிநேரம் காத்திருந்துள்ளனர்.

இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை வைத்து எடுத்த சூப்பர் ஹிட் படம் எந்திரன். அந்த படத்தில் ஒரேயொரு காட்சியில் கலாபவன் மணி நடித்திருப்பார்.

அந்த படத்தில் நடிக்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.

கலாபவன் மணி

கலாபவன் மணி

எந்திரன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள கேரளாவில் இருந்து கிளம்பிய கலாபவன் மணி விமானத்தை மிஸ் பண்ணிட்டார். உடனே அவர் ஷங்கருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார்.

ஷங்கர்

ஷங்கர்

ஷங்கர் சார் விமானத்தை தவறவிட்டுவிட்டேன். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது. அதனால் எனக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வையுங்கள் என்று கலாபவன் மணி தெரிவித்துள்ளார்.

வாங்க

வாங்க

விமானத்தை தவறவிட்டால் பரவாயில்லை. அடுத்த விமானத்தை பிடித்து வாங்க, நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஷங்கர் கூறியுள்ளார். திறமையான மணியை விட்டுவிட ஷங்கருக்கு மனம் இல்லை.

ரஜினி

ரஜினி

மணி அடுத்த விமானத்தை பிடித்து சென்னை வரும் வரை ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மணிக் கணக்கில் காத்திருந்துள்ளனர்.

English summary
Superstar Rajinikanth and Aishwarya Rai waited for hours for Kalabhavan Mani. This happened during the shoot of Enthiran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil