»   »  ராஜு சுந்தரம் சொன்ன ஒரு வார்த்தையால் சபதம் போட்ட நடிகை

ராஜு சுந்தரம் சொன்ன ஒரு வார்த்தையால் சபதம் போட்ட நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
கத்ரீனா கைஃபை கதறவிட்ட ராஜு சுந்தரம்- வீடியோ

மும்பை: டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் சொன்ன ஒரு வார்த்தையால் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சபதம் போட்டு வென்றுள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து வந்து பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் கத்ரீனா கைஃப். 2003ம் ஆண்டில் இருந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கத்ரீனா கைஃப் அருமையாக நடனம் ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நடனம்

நடனம்

நடிக்க வந்த புதிதில் நடனமாடுவது தான் எனக்கு பெரிய கஷ்டமாக இருந்தது. வெங்கடேஷுடன் சேர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்தபோது ராஜு சுந்தரம் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். என் நடனம் பிடிக்காமல் கோபத்தில் இருந்தார் என்று தெரியும். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை என்று கத்ரீனா தெரிவித்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பின்னர் நான் சல்மான் கானுடன் சேர்ந்து வான்டட் படத்தில் நடித்தேன். ஒரு டான்ஸராக கத்ரீனா ஜீரோ என்று ராஜு மாஸ்டர் சல்மான் கானிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றார் கத்ரீனா.

பயிற்சி

பயிற்சி

ராஜு சுந்தரம் சொன்னதை கேட்டதும் டான்ஸில் அசத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். டான்ஸ் மாஸ்டர்களிடம் நடனம் பயின்றேன். டான்ஸ் மாஸ்டர்களான போஸ்கோ-சீசர் ஆகியோர் டான்ஸ் ஆட நம்பிக்கை அளித்தனர் என்று கத்ரீனா தெரிவித்தார்.

ஆமீர் கான்

ஆமீர் கான்

கத்ரீனா கைஃப் தற்போது ஆமீர் கானின் தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் மற்றும் ஷாருக்கானின் ஜீரோ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Katrina Kaif said that she started taking dance lessons seriously after overhearing choreographer Raju Sundaram telling Salman Khan that she is a zero as a dancer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X