»   »  நாள் முழுவதும் அழு அழுன்னு அழுதேன்: ஆர்.ஜே. பாலாஜி

நாள் முழுவதும் அழு அழுன்னு அழுதேன்: ஆர்.ஜே. பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் நாள் முழுவதும் அழுதது பற்றி ஆர்.ஜே. பாலாஜி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

படங்களில் பிசியாக உள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையில் அவர் திடீர் என்று தனது தாத்தா பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.

அந்த போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது,

திருட்டு

திருட்டு

என் தாத்தாவை மிஸ் செய்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது அவரின் சட்டை பாக்கெட்டில் இருந்து பணம் திருடுவேன். பல காலம் திருடியும் நான் ஒரு முறை கூட சிக்கவில்லை.

பணம்

பணம்

நான் திருடியது கூட தெரியவில்லையே தாத்தா சரியான மந்தமாக உள்ளாரே என்று நினைத்துள்ளேன். பல ஆண்டுகள் கழித்து நான் முதல் சம்பளம் வாங்கியவுடன் 1,700 ரூபாயை அவரிடம் கொடுத்து இது உங்களின் பாக்கெட்டில் இருந்து நான் திருடியது என்றேன்.

தெளிவு

தெளிவு

அதற்கு அவரோ நீ இன்னும் எனக்கு ரூ.650 கொடுக்க வேண்டும் என்றார். நான் திருடியது தெரிந்தும் பல ஆண்டுகளாக அதை அவர் என்னிடம் கூறவே இல்லை. இதை நினைத்து அன்த நாள் முழுவதும் அழுதேன்.

முடிவு

அடுத்தவரின் உண்மையான அன்பை அவர்களின் வீக்னஸ் என கருதி தவறு செய்யக் கூடாது என்று அன்று முடிவு செய்தேன். அதன் பிறகு நான் தவறுகள் செய்திருக்கலாம், ஆனால் அதை நான் திருத்திக் கொண்டிருக்கிறேன். இன்று நான் இப்படி இருப்பதற்கு காரணமான என் தாத்தாவுக்கு நன்றி என பாலாஜி தெரிவித்துள்ளார்.

English summary
Actor RJ Balaji has posted about his grandpa on facebook. He explained in detail about how he used to steal money from his grandpa's shirt pocket for a long time without being caught.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X