»   »  தந்திரமா கன்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய், ஆணியே புடுங்க வேண்டாம்னு கிளம்பிய சல்மான்

தந்திரமா கன்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய், ஆணியே புடுங்க வேண்டாம்னு கிளம்பிய சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னாள் காதலரான சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தந்திரமாக கன்டிஷன் போட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

ஒரு காலத்தில் காதலர்களாக இருந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் பிரிந்துவிட்டனர். தற்போது ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சன் வீட்டு மருமகள்.

இந்நிலையில் சல்மான், ஐஸ்வர்யாவை வைத்து படம் இயக்க விரும்பினார் சஞ்சய் லீலா பன்சாலி.

பத்மாவதி

பத்மாவதி

பன்சாலி இயக்கி வரும் பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

சல்மான்

சல்மான்

பத்மாவதி படத்தில் நடிக்குமாறு சல்மான் கான், ஐஸ்வர்யா ராயை பல ஆண்டுகளுக்கு முன்பே கேட்டாராம் பன்சாலி. ஐஸ்வர்யாவும் நடிக்க சம்மதித்துள்ளார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

நான் பத்மாவதி படத்தில் நடிக்கிறேன் ஆனால் சல்மான் கானை மன்னர் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் போட்டால் தான் நடிப்பேன் என்று பன்சாலிக்கு கன்டிஷன் போட்டாராம் ஐஸ்.

கில்ஜி

கில்ஜி

அலாவுதீன் கில்ஜி, பத்மாவதி சேர்ந்து வரும் காட்சிகள் படத்தில் இல்லை. அது தெரிந்து ஐஸ் கன்டிஷன் போட சல்மான் கானோ நான் கில்ஜியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

அடம்

அடம்

காதல் கதையாக இருந்தால் அந்த படத்தில் நடிக்க சல்மான் தயாராக இருந்தாராம். ஹம் தில் தே சுகே சனம் போன்று ஐஸ்வர்யாவுடன் கெமிஸ்ட்ரி ஏற்படுத்த நினைத்தாராம். ஐஸுடன் சேர்ந்து வரும் காட்சிகள் இல்லை என்றதும் நடிக்க மறுத்துவிட்டாராம் சல்மான்.

English summary
Padmavati starring Ranveer Singh, Deepika Padukone and Shahid Kapoor is creating the right waves, we were quite surprised when we recently learnt that this Sanjay Leela Bhansali directorial was originally meant to star Salman Khan and Aishwarya Rai Bachchan in lead roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil