»   »  வருங்கால கணவரை பார்த்து ராக்கி கட்டிடுவேன்னு மிரட்டிய சமந்தா

வருங்கால கணவரை பார்த்து ராக்கி கட்டிடுவேன்னு மிரட்டிய சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ராக்கி கட்டி அண்ணனாக்கிவிடுவேன் என்று நடிகை சமந்தா தன்னை மிரட்டியதாக நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நாக சைதன்யா நடித்துள்ள யுத்தம் சரணம் படம் வரும் 8ம் தேதி ரிலீஸாகிறது.

சைதன்யா

சைதன்யா

யுத்தம் சரணம் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாக சைதன்யா தனது காதல் விவகாரம் பற்றி பேசினார். ஏ மாயா சேவாவே படத்தில் நடித்தபோது எனக்கும், சமந்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்றார்.

காதல்

காதல்

நாங்கள் இருவரும் அனைத்து விஷயங்களையும் மனம் விட்டு பேசுவோம். வீட்டிற்கு தெரியாமல் காதலை வளர்த்தோம். சீக்கிரமாக வீட்டில் உள்ளவர்களிடம் காதலை தெரிவிக்குமாறு சமந்தா என்னை வற்புறுத்தினார் என்றார் சைதன்யா.

சைதன்யா

சைதன்யா

நான் என் பெற்றோரிடம் காதலை தெரிவிக்காமல் காலம் கடத்தி வந்தேன். இது சமந்தாவுக்கு பிடிக்கவில்லை. சீக்கிரமாக சொல்லி அனுமதி வாங்கு என்று தொடர்ந்து வலியுறுத்தினார் என்று சைதன்யா தெரிவித்தார்.

ராக்கி

ராக்கி

நீ வீட்டில் காதலை சொல்லி அனுமதி வாங்காவிட்டால் ராக்கி கட்டி அண்ணனாக்கிவிடுவேன் என்று சமந்தா மிரட்டினார். இதையடுத்தே என் பெற்றோரிடம் காதலை தெரிவித்தேன் என்று சைதன்யா கூறினார்.

English summary
Naga Chaitanya said that Samantha threatened to tie rakhi if he doesn't reveal their relationship to his parents.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil