»   »  ஜெ.வுக்கு அஞ்சலி: பலரும் கண்டுகொள்ளாத சசிகலாவுக்கு கும்பிடு போட்ட நடிகர் சத்யராஜ்

ஜெ.வுக்கு அஞ்சலி: பலரும் கண்டுகொள்ளாத சசிகலாவுக்கு கும்பிடு போட்ட நடிகர் சத்யராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சத்யராஜ் சசிகலாவை போய் பார்த்து கும்பிட்டார்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.

When Sathyaraj greets Sasikala

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் சத்யராஜ் தனது மகன் சிபிராஜுடன் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திவிட்டு சத்யராஜ் அங்கு நின்று கொண்டிருந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அருகில் சென்று அவரை பார்த்து கும்பிட்டார். ஜெயலலிதாவின் உடலை சுற்றி சசிகலாவின் குடும்பத்தார் தான் நின்று கொண்டிருந்தார்கள்.

அஞ்சலி செலுத்த வரும் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சசிகலாவை பார்த்தும் பார்க்காதது போன்று சென்றார்கள். இந்நிலையில் தான் சத்யராஜ் சசிகலாவை பார்த்து கும்பிட்டார்.

English summary
Actor Sathyaraj paid tribute to Jayalalithaa and greeted her friend Sasikala. Noted politicians and celebs who paid tribute to Jaya just ignored Sasikala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil