»   »  ட்விட்டரில் உளறிய நெருப்புடா அருண்ராஜாவை கலாய்த்த சி.கா.: யாரு பாஸு அந்த பொண்ணு?

ட்விட்டரில் உளறிய நெருப்புடா அருண்ராஜாவை கலாய்த்த சி.கா.: யாரு பாஸு அந்த பொண்ணு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்மனசு உளறல்களை ட்விட்டரில் தெரிவித்த அருண்ராஜா காமராஜை சிவகார்த்திகேயன் கலாய்த்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடல் மூலம் ஏகப் பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். விஜய்யின் பைரவா படத்தில் வந்த வர்லாம் வர்லாம் வா பைரவா பாடலை எழுதியவர்.

அவர் இன்று ட்விட்டரில் உள்மனசு உளறல்களை வெளியிட்டுள்ளார்.

மனசு

அவ உனக்குதான்னு இந்த உலகம் சொல்லலனாலும் உன்னோட உள்மனசு சொல்லிட்டே இருந்துச்சுன்னா..அவ உனக்குதான்.
😬 #உள்மனசு_உளறல்கள்

தம்பி

அருண் ராஜா காமராஜின் ட்வீட்டை பார்த்து சிவகார்த்திகேயன் ட்வீட்டியிருப்பதாவது, தம்பி உலகம் சொல்றது உள்மனசு சொல்றதெல்லாம் முக்கியமில்ல... அந்த பொண்ணு சொல்லணும் ☺️😜.

சொல்லும்

சிவகார்த்திகேயன் போட்ட கமெண்ட்டை பார்த்த அருண்ராஜா காமராஜ், சொல்லும் அதான் உள்மனசோட பவர் என்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

யாரு?

யாரு அருண்ராஜா அந்த பொண்ணு? நாங்க கேட்கவில்லை உங்களின் ரசிகர்கள் தான் கேட்கிறார்கள்.

English summary
When lyricist Arunraja Kamaraj tweeted about heart thoughts, young sensation Sivakarthikeyan made fun of him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil