»   »  நடிகர் திலகம் கண்டெடுத்த விலைமதிப்பில்லாத மாணிக்கம் ஜெயலலிதா

நடிகர் திலகம் கண்டெடுத்த விலைமதிப்பில்லாத மாணிக்கம் ஜெயலலிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 12 வயது சிறுமி ஜெயலலிதாவை பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் நடிகையாக வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பிறந்தவர் ஜெயலலிதா. பிறந்தபோது அவருக்கு அவரது பாட்டியின் பெயரான கோமளவள்ளி என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன் பிறகே அவரின் பெயர் ஜெயலலிதா என மாற்றப்பட்டது.

When Sivaji Ganesan saw an actress in 12-year old Jaya

ஜெயலலிதா சிறு வயதில் இருந்து பியானோ வாசிக்க கற்றுக் கொண்டார். மேலும் பரதம், மோகினியாட்டம், மணிபுரி மற்றும் கதக் ஆகிய நடனங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

ஜெயலலிதாவுக்கு 12 வயது இருக்கும்போது அதாவது 1960ம் ஆண்டு மே மாதம் மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேற்றம் செய்தார். அந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

ஜெயலலிதாவின் நடனத்தை பார்த்த சிவாஜி இந்த சிறுமி நடிகையாக வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். அவரது விருப்பம் நிறைவேறி பிற்காலத்தில் ஜெயலலிதா சிவாஜிக்கு ஜோடியாகவே நடித்தார்.

English summary
Jayalalithaa did her bharathanatyam arangetram at a young age of 12. Chief guest Sivaji Ganesan saw the little girl and expressed his wish to see her as an actress in future.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil