»   »  உன் நட்பே வேண்டாம்: ரஜினியால் சதீஷிடம் கோபித்த சிவகார்த்திகேயன்

உன் நட்பே வேண்டாம்: ரஜினியால் சதீஷிடம் கோபித்த சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினிக்காக நட்பை ஒதுக்கிய சிவா.. டோன்ட் கேர் என்று சொன்ன சதீஷ்..!!

சென்னை: சூப்பர் ஸ்டாருக்காக சதீஷின் நடிப்பே வேண்டாம் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளார் சிவகார்த்திகேயன். ரஜினிகாந்தை போன்றே சிவகார்த்திகேயனுக்கும் குட்டீஸ் ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பற்றி நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒரு விஷயம் தெரிவித்துள்ளார்.

சதீஷ்

சதீஷ்

தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் சிவகார்த்திகேயன் திடீர் என்று எங்கோ கிளம்பியிருக்கிறார். எங்கே கிளம்புகிறீர்கள் என்று சதீஷ் கேட்டதற்கு சிவா பதில் அளிக்கவில்லை.

ரஜினி

ரஜினி

சதீஷ் சிவகார்த்திகேயனின் கார் டிரைவரிடம் சென்று அவர் எங்கே போகிறார் என்று கேட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்க செல்கிறார் என்று பதில் அளித்தார்.

வருவேன்

வருவேன்

டிரைவர் சொன்னதை கேட்டதும் சதீஷுக்கும் ரஜினியை பார்க்கும் ஆசை ஏற்பட அவர் சிவகார்த்திகேயனிடம் சென்று நானும் உங்களுடன் வருவேன் என்று அடம்பிடித்துள்ளார்.

கார்

கார்

நான் மட்டும் தான் அவரை பார்க்க அனுமதி வாங்கியிருக்கிறேன், நீ வர வேண்டாம் என்று சிவா சதீஷிடம் தெரிவித்திருக்கிறார். சதீஷோ சிவாவின் பேச்சை கேட்காமல் அவரின் காரில் ஏறிவிட்டார்.

பரவாயில்லை

பரவாயில்லை

இப்படி திடீர் என்று என்னுடன் ரஜினி சாரை பார்க்க வருகிறாய் என்றால் உன் நட்பே வேண்டாம் என்றாராம் சிவா. சூப்பர் ஸ்டாருக்காக நட்பு போனால் பரவாயில்லை என்று சதீஷ் சிவாவுடன் சேர்ந்து சென்று ரஜினியை பார்த்துள்ளார்.

English summary
Sivakarthikeyan once told actor Sathish that he doesn't want his friendship anymore. He said so when Sathish was adamant in coming with Siva to meet Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil