»   »  கண்ட இடத்தில் கை வைக்க பார்த்த விஷமி: விரலை திருகி அலற வைத்த நடிகை

கண்ட இடத்தில் கை வைக்க பார்த்த விஷமி: விரலை திருகி அலற வைத்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டெல்லியில் கூட்டத்தில் பின்னால் இருந்து நைசா தொட வந்த நபரின் விரலை பிடித்து திருகி வலியால் அலற வைத்துள்ளார் டாப்ஸி.

பெரும் பெரும் நடிகைகள் உள்ள பாலிவுட்டில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் டாப்ஸியை தேடி வருகின்றன. அவரும் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

When Taapsee twisted the finger of a miscreant..

பெண்கள் தங்களை யாராவது கண்ட இடத்தில் தொட்டால் பயத்தில் உறைந்துவிடாமல் துணிந்து அடிக்க வேண்டும் என்று டாப்ஸி அண்மையில் தெரிவித்திருந்தார்.

எவனாவது கண்ட இடத்தில் கையை வைத்தால் அவனை எப்படி அடிக்க வேண்டும் என்பதை வீடியோ மூலம் விளக்கி இருந்தார். இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த கீர்த்தனை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவர் டாப்ஸியை கண்ட இடத்தில் பின்னால் இருந்து தொட முயன்றுள்ளார். இதை உணர்ந்த டாப்ஸி அந்த நபரின் விரலை பிடித்து திருக்க அவர் வலியால் அலறியுள்ளார்.

English summary
When a miscreant tried to poke actress Taapsee from behind, she grabbed his finger and twisted it so hard that he winced in pain.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil