For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நம்ம ஊரு சினிமா ஸ்டார்கள் 'சான்டா கிளாசா' மாறுனா என்ன பரிசு தருவாங்க? கற்பனை காமெடி கலாட்டா

  By Veera Kumar
  |

  சென்னை: கிறிஸ்துமஸ் என்றால் சான்டா கிளாஸ் இல்லாமலா. கிறிஸ்துமஸ் தாத்தா என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவர் கொடுக்கும் பரிசு பொருட்கள்தான்.

  நம்மூர் நடிகர், நடிகைகளும் சான்டா கிளாசாக மாறி பரிசு கொடுப்பது என்று முடிவு செய்துவிடுகிறார்கள். மற்ற பரிசுகள் எல்லாம் காலத்தால் அழிந்தாலும், அழியாத செல்வம் கல்வி செல்வம்தானே. அதனால, புத்தகங்களையே பரிசாக அளிப்பது என்றே முடிவெடுக்கின்றனர் நம்மூர் கலைஞர்கள். அப்படி முடிவெடுத்த பிறகு யார்.. யார் எந்த மாதிரி புத்தகத்தை பரிசாக மக்களுக்கு அளிக்க வாய்ப்பு உள்ளது என்ற ஒரு கற்பனை களேபரத்தை பார்ப்போமா: (பி.கு: யார் மனசையும் புண்படுத்துவது இதன் நோக்கம் கிடையாது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே)

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  'இருக்காது ஆனா இருக்கும்'.. அவரு டயலாக்கை போலவே அமைந்த தலைப்பு கொண்ட இந்த புத்தகம்தான் நம்ம சூப்பர் ஸ்டார் கொடுப்பதாக இருக்கும். ஏழை, எளியவர்கள், இல்லாதவர்களுக்கு தன்கிட்ட உள்ள சொத்துக்கள் அத்தனையையும் பல வருஷமா எழுதி, எழுதி வைத்தாலும், எப்படி பணக்காரராகவே தொடர்ந்து இருக்க முடியும் என்பதை, எளிய உரையில், பஞ்ச் டயலாக்குகளோடு சொல்லும் புத்தகம் இது. இந்த புத்தகத்துக்குத்தான் இப்போ ஏகப்பட்ட டிமாண்ட், முந்துக்கள்.

  த்ரிஷா

  த்ரிஷா

  பல நெடுங்காலம் கடந்தும் ஹீரோயினாக இருக்கும் அம்மணி த்ரிஷா, தனது சீக்ரெட்டை சொல்லும் 'என்றும் 16' என்ற புத்தகத்தை தருவார் என எதிர்பார்க்கலாம். வயசானாலும் ஸ்டைலும், இளமையும் எப்படி அப்படீயே வச்சிக்கிறது.. விஜயோட ஜோடியா நடிச்சுட்டு, அவரு பையன் ஹீரோவாகுற காலத்திலும் எப்படி ஹீரோயினாவே இருப்பது என்பது போன்ற தமிழ் சினிமா பெண்கள் இதுவரை கண்டறியாத பல அரிய பல ரகசியங்கள் இந்த புத்தகத்தில் இருக்கும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

  லிங்குசாமி

  லிங்குசாமி

  'மொத்தவித்தை-முடிவுல சொத்தை' என்ற புத்தகத்தை லிங்குசாமி பரிசளிப்பார் என எதிர்பார்க்கலாம். கத்துகிட்ட மொத்த வித்தையையும் எப்படி ஒரே படத்தில் இறக்குவது, எப்படி நம்மை நாமே டியூன் செய்துகொள்வது என்பது போன்ற பல டெக்னிக்கல் விஷயங்களை இந்த புத்தகம் அலசும்.

  சந்தானம்

  சந்தானம்

  'காப்பியடிப்பதில் காப்புரிமை' என்ற புத்தகத்தை வழங்க தயாராக இருப்பவர் சந்தானம். வாழைப்பழ காமெடி முதல் ஆயா வடைசுட்ட கதைவரை உலகத்துக்கே தெரிந்த விசயத்தையும் நாமதான் கண்டுபிடிச்சமாதிரி காட்டுவதெப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிறது. படிக்காமல் பரிட்சை எழுத போகும் மாணவர்களுக்கு இந்த புத்தகம் பரம திருப்தியளிக்கும்.

  கே.எஸ்.ரவிக்குமார்

  கே.எஸ்.ரவிக்குமார்

  'பினிஷிங் குமாரு' என்ற அற்புதமான புத்தகத்தை உங்களுக்கு வழங்கும் சாண்டா, நமது மசாலா பட மன்னன் கே.எஸ்.ரவிக்குமார். சோழர் காலம் முதல் சோனாக்ஷி காலம் வரை எப்படி ஒரே மாதிரி கதையுள்ள படத்தை எடுத்து அதையும் ஓட்டுவது?, மற்றவர்கள் நம்மை எவ்வளவு ஓட்டினாலும் எதுவுமே நடக்காதது போல எப்படி கெத்து காட்டுவது? போன்ற தங்கமலை ரகசியங்கள் பலவும் இந்த புத்தகத்தில் கொட்டிக்கிறதாம்.

  அஜித்

  அஜித்

  'வாக்கிங் டிப்ஸ்' என்ற தலைப்பு கொண்ட புத்தகத்தை வழங்க உள்ளவர் அஜித் சான்டா. தினமும் நடப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை இப்புத்தகம் விளக்கும். மின்னல்வேக டான்ஸ் ஆடுவது எப்படி.. இளமை லுக்குடன் காட்சியளிப்பது எப்படி என்பது போன்ற சில பல டிப்சுகளும் இத்துடன் இணைந்திருக்கும். புத்தகத்தை வாசிக்கும்போதே, அவ்வப்போது. "அது.." என ஆக்ரோஷ குரலும், 'மங்காத்தாடா..' என்னும் மயக்கும் குரலும் நமது பின்னணியில் மாறிமாறி ஒலிக்கும் வகையில் நவீன டெக்னாலஜியுடன் இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  விஜய்

  விஜய்

  '30 நாட்களில் சூப்பர் ஸ்டார் ஆவது எப்படி' என்ற புத்தகத்தை வழங்குவதற்கு, அந்த புக்கை படித்தே சூப்பர் ஸ்டாராகிவிட்ட விஜய்ண்ணாவை விட்டால் வேறு யார் பொருத்தமாக இருப்பார்கள். ஆம் அவரேதான் வழங்கப்போகிறார்.

  சிலம்பரசன்

  சிலம்பரசன்

  சான்டா சிம்பு வழங்கப்போகும் புத்தகத்தின் பெயர் 'இருக்கு ஆனா இல்ல'. கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் புத்தக தலைப்புடன் பொருந்திப்போனாலும் இதோட டாபிக்கே வேற. ஒரு பீல்டுல நாம இருக்கோம் அப்படீங்கிறத உட்கார்ந்த இடத்துல இருந்தபடியே உலகத்துக்கு அறிவிக்கும் வர்மக்கலையை கத்துக்கொடுக்கும் புத்தகம் இது. சர்ச்சைகளை வச்சே நம்ம பேர மட்டும் எப்படி மறக்கவிடாம செய்றது என்பதை தெரிந்துகொள்ள உதவும் என்பதால் பிலிம் இன்ட்டிடியூட் செல்லும் பசங்களுக்கு ஏற்ற புத்தகமுங்க.

  நயன்தாரா

  நயன்தாரா

  'ஊரெல்லாம் ஜொள்ளு.. உதிர்ந்து போகும் பல்லு' என்ற புத்தகத்தை உங்களுக்கு வழங்க உள்ளவர் தாரா.. நயன்தாரா. அடாத மழை விடாமல் பெய்வதை போல, உங்களை பார்த்து ஊரையே ஜொள்ளு ஊத்த வைப்பது எப்படி? பக்கத்தில் வந்ததும் 'பறக்காஸ்..' சொல்லுவது எப்படி? என்பது போன்ற கூடுவிட்டு கூடு பாயும் தந்திரங்கள் பலவற்றை அள்ளி வைத்திருக்கும் சுரபி இந்த புத்தகம். மிஸ் பண்ணிறாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!

  English summary
  This is Xmas season. If Tamil cinema actors become like Santa Claus then what gift they will give for us?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X