»   »  ஸ்பெஷல் பார்ட்டி… கன்னட நடிகைக்கு அழைப்பு விடுத்த பிரபுதேவா

ஸ்பெஷல் பார்ட்டி… கன்னட நடிகைக்கு அழைப்பு விடுத்த பிரபுதேவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் கிசுகிசுக்கள் கலந்து கட்டி அடித்தாலும் கண்டு கொள்ளாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் பிரபுதேவா. ஆனாலும் அவரைச் சுற்றி கிசுகிசுக்கள் பஞ்மில்லாமல் பரவிக்கொண்டிருக்கிறது.

நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர் என முப்பரிமாணங்களை கொண்ட பிரபுதேவா. சில வருடங்களுக்கு முன்பு இவரும் நடிகை நயன்தாராவும் காதலித்தனர்.

பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள நடிகை நயன்தாரா இந்து மதத்திற்கு கூட மாறினார். பிறகு ஒரு சில கருத்து வேறுபாடு பிரச்சனைகளால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

காதல் தேவையில்லை

காதல் தேவையில்லை

காதல் முறிவுக்குப் பின்னர் பிரபுதேவா, சில படங்களை இயக்கிவிட்டார். அவருடைய படங்களில் நடிக்கும் நடிகையுடன் கிசுகிசு பரவினாலும் குழந்தைகள் போதும் இப்போதைக்கு காதல் தேவையில்லை என்று சொல்லிவந்தார் பிரபு தேவா.

விடுவோமா நாங்க

விடுவோமா நாங்க

ஆனாலும் நாங்க விடமாட்டோமே என்று விடாமல் எழுதி வந்த ஊடகங்களுக்கு சூடாக ஒரு செய்தி மாட்டியுள்ளது. அது வேறுயாருமல்ல... கன்னட நடிகை தேஜஸ்வினி தானாம்.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

தேஜஸ்வினியுடன் மீண்டும் காதலில் விழுந்துள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் ஆனால் பத்தவச்சிட்டியே பறட்டை என்கிற ரீதியில் சமீபத்தில் சென்னை வந்த பிரபுதேவா பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் பங்கேற்க தனது நெருக்கமான இயக்குநர்கள், நடிகர்களை அழைத்திருந்தார்.

தேஜஸ்வினிக்கு ஸ்பெஷல் அழைப்பு

தேஜஸ்வினிக்கு ஸ்பெஷல் அழைப்பு

நடிகைகளில் கன்னட ஹீரோயின் தேஜஸ்வனிக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு விடுத்தார். அவர் பார்ட்டியில் கலந்துகொண்டார். அவரை சக விருந்தினர்களுக்கு பிரபு தேவா அறிமுகம் செய்து வைத்தார்.

நாங்க நண்பர்கள்தான்

நாங்க நண்பர்கள்தான்

நீண்ட நாட்களாகவே பிரபு தேவாவை எனக்கு நன்றாக தெரியும். அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். நெருங்கிய நண்பர்களுக்கு அவர் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். என்னை அதில் பங்கேற்க கேட்டார்' என்றார். மேலும் எங்கள் உறவு எதையும் எதிர்பார்த்து ஏற்பட்டது கிடையாது.

நட்பைத் தாண்டிய உறவு

நட்பைத் தாண்டிய உறவு

நாங்கள் இருவரும் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பழகும் மிக நெருக்கமானவர்கள்' தேஜஸ்வனியின் இந்த பதில், இருவருக்கு இடையே நட்பை தாண்டிய உறவு இருப்பதற்கு அறிகுறி என ஊடகத்தினர் கருதுகின்றனர். இவர்களின் காதல் விவகாரம் விரைவில் வெளிவரும் என சினிமா வட்டாரத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது

தண்ணீருக்குள் மூச்சுவிட்டா மேலே கொப்பளிச்சுதானே ஆகணும் என்ன நாங்க சொல்றது!

English summary
Kannada actress Tejaswini is a good pal of choreographer-turned-director Prabhudheva, so much so that every time the latter is in Chennai or Bengaluru, he calls and catches up with her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil