»   »  குத்தாட்டம் போடுகையில் காலை நறுக்கென்று மிதித்த வடிவேலு: வலியால் அழுத சதா

குத்தாட்டம் போடுகையில் காலை நறுக்கென்று மிதித்த வடிவேலு: வலியால் அழுத சதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எலி படத்தின் படப்பிடிப்பின்போது வடிவேலு சதாவின் காலை மித்துள்ளார். இதையடுத்து அவர் வலி தாங்க முடியாமல் அழுதுவிட்டாராம்.

மார்க்கெட் இல்லாமல் போனதால் நடிகை சதா வடிவேலு ஜோடியாக எலி படத்தில் நடித்து வருகிறார். வடிவேலுவும், சதாவும் ஜோடியாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது. சதா ஏன் வடிவேலு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார், என்ன கொடுமை சார் இது என்று சதாவின் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


யுவராஜ் இயக்கி வரும் இந்த படத்தை பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


சதா

சதா

வடிவேலு அசின், நயன்தாராவை எல்லாம் படங்களில் காதலித்துள்ளார் என்று இயக்குனர் யுவராஜ் சதாவிடம் ஒரு பிட்டைப் போட்டுள்ளார். படத்தில் நீங்கள் வடிவேலுவின் ஜோடியாக இருந்தாலும் உங்களுக்கு இடையேயான காதல் காமெடியாகத் தான் இருக்கும் என்று யுவராஜ் கூறியதை கேட்ட பிறகே சதா மனதை தேற்றிக் கொண்டு நடிக்க ஒப்புக் கொண்டாராம்.


பின்னி மில்ஸ்

பின்னி மில்ஸ்

வடிவேலு எலி படத்தில் சிஐடி அதிகாரியாக வருகிறாராம். படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள பின்னி மில்ஸ் பகுதியில் நடந்து வருகிறது. வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.


குத்துப்பாட்டு

குத்துப்பாட்டு

முன்னதாக வடிவேலும், சதாவும் ஆடும் குத்துப்பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். படப்பிடிப்புக்கு வந்தபோது சதா சற்று டல்லாக இருந்துள்ளார். இதை பார்த்த வடிவேலு அவரிடம் காமெடி பண்ணி அவரை உற்சாகப்படுத்தியுள்ளார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளனர்.


காலில் மிதி

காலில் மிதி

குத்துப் பாடலுக்கு ஆடுகையில் வடிவேலு சதாவின் காலை நறுக்கென மிதித்துவிட்டாராம். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய சதாவின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாம். இதை பார்த்து பதறிய நடனக்குழுவினர் ஓடி வந்து சதாவின் காலைப் பிடித்து வலியை போக்க வைத்தார்களாம்.


படப்பிடிப்பு

படப்பிடிப்பு

சதாவின் காலை வடிவேலு மிதித்த பிறகு அவரின் ஆட்டத்தில் வேகம் இல்லாமல் போனதாம். இதை பார்த்த இயக்குனர் படப்பிடிப்பை பாதி நாளோடு முடித்துக் கொண்டு சதாவை அனுப்பிவிட்டாராம். மறுநாள் தெம்பாக வந்த சதா வடிவேலுவுடன் சேர்ந்து உற்சாகமாக ஆடினாராம்.


English summary
While shooting an item song for Eli, Vadivelu reportedly stamped Sada's foot and made her cry out of pain.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil